Tuesday, November 12, 2019

எந்த நிலை

எந்த நிலை வந்தாலும்....
வந்த நிலை மறவாதே....
( 🍀#ஓம் #நமசிவாய

சிதம்பர ரகசியம்...

சிதம்பர ரகசியம்...
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator.

எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனைக் கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்ப்பட்ட அறிவுமிக்கவன்..?

 அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்ப்பட்டது..?

இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..?

 திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!!

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களைக் கூறிவரும் வேளையில், அந்தக் கோயிலில் இருக்கும் அறிவியல், பொறியியல், புவியியல், கணிதவியல், மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்குப் பின் இருக்கும் சில அற்புதங்களை அதனிலடங்கும்.

 அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.

(1) இந்தக் கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).

(2) பஞ்ச பூதக் கோயில்களில் ஆகாயத்தைக் குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம்,

 காற்றைக் குறிக்கும் காலஹஸ்தி ஆலயம்,

 நிலத்தைக் குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது,

இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதைப் போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்தத் துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களைக் குறிக்கின்றது.

((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளைக் கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதைக் குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார்,

அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தைக் குறிப்பதாகும்.

இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சரப் படி" என்று அழைக்கப்படுகின்றது,

அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது.

 "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதைப் போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது.

இந்தக் கனக சபையைத் தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களைக் குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன,
இவை 28 ஆகமங்களையும்,
சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன,
இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளைக் கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளைக் குறிக்கின்றது,
இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாலங்களைக் குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள்,
 9 வகையான சக்தியைக் குறிக்கின்றது.
அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள்,
6 சாஸ்திரங்களையும்,
அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள்,
18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே சாட்சியாக்கியுள்ளது...
ॐஓம் நமச்சிவாய ॐ

திருப்பதி சென்று முதலில் சந்திரன்

திருப்பதி சென்று முதலில் சந்திரன் எனும் பத்மாவதி தாயாரை தரிசித்து, ராகு எனும் மலை மீது ஏறி திருமலை வந்து, கேது எனும் முடியை பரிகாரமாக தந்து, சனி எனும் கூட்டத்துடன் கூட்டமாக நின்று, செவ்வாய் எனும் காவலரை கடந்து, குரு எனும் பக்தி மார்க்கம் கொண்டு, உச்ச புதனான பெருமாளை தரிசித்து,  சூரியன் எனும் ஆத்ம பலம் பெற்று வெளியே வந்தால் கிடைக்கும் சுக்கிரன் எனும் லட்டு...

இதில் உள்ள சூழ்ச்சமம் என்ன வேனில், சந்திரன் ராகுவுக்கு எதிரி ஆகவே தாயார் திருப்பதியில் முதல் தரிசனம், பின்பு மனோ பலத்துடன் ராகு எனும் மலை ஏறினால், ராகுவின் எதிர்காரகமான கேதுவை நீச்ச படுத்த வேண்டும் அதாவது விரக்தி, தடை, பூர்வ ஜென்ம கர்மா போன்ற காரகங்களை நீச்ச படுத்த கேது எனும் முடியை பரிகாரமாக கொடுக்கிறோம், பின்பு கர்மா எனும் கூட்டத்துடன் பெருமாள் எவ்வளவு நேரம் காக்க வைப்பார் என்று தெரியாமல்(ஏனெனில் கர்மா தெரியாது) நிற்கிறோம், அப்படி நிற்கயில் கர்மா செவ்வாயை வைத்து சோதித்து பின்பு குரு எனும் பக்தி மேலோங்கி செல்கையில், புத்தியை தெளிய வைக்கும் உச்ச புதன் எனும் பெருமாளின் தரிசனம் கிடைக்கும், மனோ பலம் புத்தி பலம் சேர்ந்து சூரியன் எனும் ஆத்ம பலம் பெற்று, பின்பு அவரின் ஆசியுடன் சுக்கிரனை சிறிது உண்டியலில் காணிக்கையாக போட்டுவிட்டு மனம் நிறைந்து நிற்கும் போது, நம் பசியாற வரும் அன்னம் எனும் நவகிரக கலவையை உண்ட பின்பு, கிடைக்கும் சுக்கிரன் எனும் லட்டு அதுவே லட்சுமி கடாக்க்ஷம்...

ஓம் நமோ நாராயணாய..

தர்ம_சாஸ்திரம்

தர்ம_சாஸ்திரம்

1. இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு;

2. இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்;

3. இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்;

4. இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.

5. ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம்.

6. சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும்.

7. அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.

8. பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.

9. குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது.

10. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது.

11. துணியில்லாமல் குளிக்கக் கூடாது.

12. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது.

13. கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது.

14. நெருப்பை வாயால் ஊதக் கூடாது.

15. கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது.

16. எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ, பெண்கள் கற்பை இழந்து விட்டால், புண்ணிய நதியில், 18 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.

17. திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவனை சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.

18. சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.

19. சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.

20. கோவணமின்றி, வீட்டின் நிலைப்படியை தாண்டக் கூடாது.

21. இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.

22. சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும்.

23. சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ, வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.

24. மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.

25. குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இங்கேயெல்லாம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது.

26. தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும். இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது.

27. இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.

28. தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது.

29. வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.

30. மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.

31. பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.

32. ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.

33. வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.

34. ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.

35. தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.

36. பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.

37. பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.

38. அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது.

39. ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களைப் பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.

40. பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.

41. பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக் கூடாது.

42. பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம்.

43. பசு மாட்டை, "கோமாதா வாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.

44. தூங்குபவரை திடீரென்று எழுப்பக் கூடாது; தூங்குபவரை உற்றுப் பார்க்கக் கூடாது.

45. பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.

46. தலை, முகம் இவற்றின் முடியை காரணம் இல்லாமல் வளர்க்கக் கூடாது.

47. அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை; ஆசிரியர் - மாணவர்; கணவர் - மனைவி; குழந்தை- தாய்; பசு - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.

48. வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.

49. நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது.

தர்மசாஸ்திரம்

நண்பர்களுக்கு அடிக்கடி குரு பற்றிய சந்தேகம் தீர்க்கும் பதிவு

நண்பர்களுக்கு அடிக்கடி குரு பற்றிய சந்தேகம் தீர்க்கும் பதிவு.  அவசியம் ஒரு முறையாவது படிக்க வேண்டுகிறேன்.

குரு தரிசனம்

கேள்வி பதில்
--------------------

1. குரு எல்லாம் குருவா ?

எல்லா குருவும் குரு அல்ல.
குரு முன் உன் மனம் நின்றாலே அவர் குருவாவர்.
குருவிடம் உன் மனம் பேச வேண்டும்.
குருவிடம் பணம் பேசக் கூடாது.

2. குருவை தேடுபவர் யார்?

குருவைத் தேடுபவர் இறைவனைத் தேடுகிறான்.

3. குருவின் தகுதியை சோதிப்பவன் யார்?

குருவின் தகுதியை சோதிப்பவன் துடுப்பு இல்லா படகோட்டி.

4. குருவைக் கண்டால் என்னவாக  உருவாகிறான்?

குருவைக் கண்டவன் உருப்பெறத் தொடங்குகிறான்.
குருவை ஏற்பவன் குருவின் சீடனாகிறான்.

5. குரு முழுமையானவராக சாட்சி என்ன?

குருவை முழுமையானவராக அறிய, அவர் மெய் ஞானமே சாட்சி.

6. குரு என்பவர் யாருக்காக?

குரு என்பவர் மக்களுக்காக வந்த இறைதூதர்.

7. குருவிடம் என்ன கிடைக்கும்?

குருவால் திருவருள் கிட்டும்.

8. குரு என்பவர் யார்?

குரு என்பவர் மெய் ஞானத் திறவுகோல்.

9. குருகடாட்சம் யாரிடம் சேர்க்கும்?

இறைவனிடம் சேர்க்கும்.

10. நல்ல குருவை அறிவது எப்படி?

சுயநலம், ஆடம்பரம், பாரபட்சம் அற்ற எளிமை,இனிமை, தெய்வீகம்
அமைதி, சாந்தம் நற்பண்பின் வடிவுமானவர்.

11. குருவாக ஆவதற்கு வயது உண்டா?

தெய்வீக தெளிவு இருந்தால் போதும்.

12. குரு தன்மை என்ன?

இறைத்தன்மை நிறைந்தவர்.

13. குருவால் தெய்வீகத்தை காட்ட முடியுமா?

முடியும் நீ தகுதி உடையவனாய் இருந்தால்.

14. உண்மை குருவை பரிசோதித்துக் கொண்டே இருக்கலாமா?

பரிசோதித்துக் கொண்டே இருக்கலாம். நீ முன்னேறாமல் இருப்பாய்.

15. குருவை நம்ப என் மனம் மறுக்கிறது ஏன்?

முதலில் உன்னை நம்பு பிறகு குருவை நம்பு.

16. குரு சேவை எதற்கு?

குரு சேவை குருவுக்கு அல்ல. அவருக்குள் இருக்கும் அருளுக்கும்
மெய்ஞானத்திற்கும் உன் சேவை சமர்ப்பணம் ஆகிறது. குரு சேவையே இறை சேவை.

17. குருவுக்கு மற்றோர் பெயர் கூறுங்கள்?

குரு என்பவர் பாவ விமோட்சகர்.

18. குருவை நாம் தேடிச் செல்ல வேண்டுமா?

இறைதேடல், இறைதாகம், இறைப்பசி இருந்தால் நீ தேடுவாய்.

19. குரு என்பவர் கடவுளா?

உன்னுள் கடவுள் ஒழிந்து இருக்கிறார்
குருவினுள் கடவுள் நிறைந்து இருக்கிறார்.

20. குரு என்பவர் எதற்கு?

குரு என்பவர் கடவுளுக்கும் நமக்கும் உள்ள தெய்வீகத் தொடர்பை ஏற்படுத்துவதற்கு.
மாயை நிலையை விலக்கி மன இருளை அகற்றுவார்.

21. குரு கடவுளை அறியச் செய்வாரா?

குரு கடவுளை உன்னுள் தெரியச் செய்வார்.

22. குருவின் மகத்துவம் என்ன?

தான் அறிந்ததை பிறர் அறியச் செய்வது

23. குருவை சோதிக்கலாமா?

அது நெருப்பாக இருந்தால் உன்னைச் சுடும்.

24. குருவை எவ்வாறு அறிவாய்?

மெய்யை மெய் அறியும்.

25. குரு கடாட்சம் பெற என்ன வேண்டும்?

குரு கடாட்சம் பெற நற்பண்பு தெய்வபக்தியும் வேண்டும்.

26. குரு பக்தி எப்படிப்பட்டது?

குரு பக்தி குழந்தை தாய்மீது வைக்கும் அன்பு போன்றது.

27. தெய்வீக குருவை எவ்வாறு அறிவாய்?

அவரைக் காண மனம் துடிக்கும். அவர் முன் அமர மனம் ஏங்கும்.
அவர் முன் மனம் அடங்கும். அவர் சொல்வதை கேட்டு ரசித்து நல்வழியில் நடக்கும்.

28. குருவிடம் பிற மதத்தவர் போகலாமா?

குரு என்பவர் மதம் சார்ந்தவர் அல்ல. எல்லாம் கடந்தால் தான் குருவாக பிரகாசிக்க
முடியும்.

29. குரு சீடனால் உலகிற்கு பயன் என்ன?

குருவால் நற்சீடனும் சீடனால் குருவும் உருவாகிறார்கள்.
இவர்களால் மட்டுமே இறைபுகழ் ஆன்மீகம் பரவுகிறது.

30. குருவை யார் தேர்வு செய்கிறார்கள்?

குருவை கடவுள் நிர்ணயம் செய்கிறார்.

31. குரு சிஷ்ய துரோகம் பாவமா?

தெய்வ நிந்தனைக்கு உரியது. பல  இழிபிறப்பைத் தரும்.

32. குருவாக முதல் தகுதி என்ன?

எப்போதும் இறை உணர்நிலையில் சமாதி நிலை அடைபவரே குருவாக முடியும்.

33. குருவே இல்லாது ஆன்மீகத்தில் ஜெயிக்க முடியுமா?

பிறப்பிலேயே ஜென்மபலன், கர்மபலன், யோகபலன், ஆன்மீகப்பலன் கூடியவனாக இருக்க வேண்டும்.

34. குருவுக்குள் அடங்கியது எது?

பிரபஞ்சமே அண்டம். அண்டமே ஆண்டவன். ஆண்டவனையே உள் அடக்கியவன் குரு.

35. குரு நேசம்?

சிவ நேசம்.

36. குருவால் முக்தி தர முடியுமா?

குருவால் பக்தியையும் முக்தியையும் காட்ட முடியும்.

37. குரு எதையாவது தேடுவாரா?

தேடுவார். நல்ல சிஷ்யனை.

38. குருவுக்கு ஞானம் எங்கிருந்து  கிடைக்கிறது?

இறைவனிடம் இருந்தே கிடைக்கிறது.

40. குருவிடம் குருட்டு நம்பிக்கை  வைக்கலாமா?

உண்மை குருவிடம் வைக்கும் நம்பிக்கை தெய்வத்தையே போய் சேரும்.

41. குருவுக்குள் கோயில் கொள்வது எது?

இறைவன்.

42. குரு பாவத்தை போக்குவாரா?

குரு பாவத்தை அறிந்து தெளியச் செய்வார்.
பாவத்தை அனுபவித்து கழிக்கச் செய்வார். பாவம் கழிக்காது ஆண்டவனிடம் போக முடியாது.

43. குருவுக்கு சிஷ்யன் ஆற்றும் கடமை யாது?

நல்ல பண்புள்ள சிஷ்யனாக இருப்பதுவே குருவுக்கே பெருமை.

44. குருவிடம் சிஷ்ய பாரபட்சம் உண்டா?

குரு ஒரு ஜீவகாந்தம் (பரகாந்தம் - குரு).

இரும்பாக இருந்தாலும் துரும்பாக இருந்தாலும் ஈர்த்து கொள்ளும்.

45. குரு வேதம் ஓத வேண்டுமா?

மானசீக பூஜையுடன் மானசீகமாக  இறைவனாகவே இருப்பார்.

46. குரு ஜாதி பார்த்து அருள் புரிவாரா?

இறைவன் சாதி பார்த்தா அருள் புரித்தான்.

47. குருவை மறந்தால்?

தெய்வம் மறக்கும்.

48. குருவிடமிருந்து விலகியவன்?

தெய்வத்திடமிருந்து விலகிடுவான்.

49. குருவை வஞ்சிப்பது?

தெய்வக் குற்றம்.

50. குருவின் வெளிப்பாடு யாது?

 மெய் ஞானம்.

சிவனே என்றிருப்பது என்றால்

சிவனே
     என்றிருப்பது
         என்றால்🔥🧘🏻‍♀

1) மனம்
     அமைதியாக
     இருப்பது
     என்று பொருள்

2). வீணான                      
      எண்ணங்களில்      
      இருந்து
      விடுபட்டிருப்பது    
      என்று பொருள்

3). கவலையிலிருந்து  
      விடுபட்டிருப்பது
      என்று பொருள்

4).  எல்லாப்  
       பொறுப்பையும்
       அவரிடம்    
        கொடுத்தாகி
       விட்டது என்று
       பொருள்

5)    எல்லாம்
        நன்மைக்கே
        என்று பொருள்

6).    எதனாலும்
        குழப்பமடையாத
        நிலை
        என்று பொருள்

7).  ஆடாத,அசையாத  
       நிச்சய புத்தி
       உடைய மனம்  
       என்று பொருள்

8).  மனம்
       லேசாகவும், முகம்  
       மலர்ந்திருக்க  
       வேண்டும்  
       என்பது பொருள்

9).   எந்த ஒரு  
       சூழ்நிலையிலும்  
      திருப்தியாக
      இருப்பது என்று  
      பொருள்

10). தன்னிடம்
        வருபவர்களின்
        மனதை அமைதி    
        அடைய    
        வைப்பது
        என்பது    
        பொருள்

11).  ஏகாந்தத்தை
        அனுபவிப்பது  
        என பொருள்

12).   சதாகாலம்
         அவரையே  
       நினைத்திருப்பது        
       என்பது பொருள்

13).  எந்த ஒரு
        சூழ்நிலையிலும்  
        நிம்மதியாக
        இருப்பது என்று  
        பொருள்

14). தன்னால்  
        பிறரும் பிறரால்  
        தானும்  
       துக்கமடையாத
       நிலை என  
       பொருள்...

15).  உலகீய
         பொருட்களில்
         சாரமில்லை
         சிவமே
         இன்பம் என  
        நிலைத்தி  
        ருப்பதாக  
        பொருள்...

இப்படி பரம்பொருளான தந்தை ஈசனை என்றும் நினைத்து அவர் சிந்தனையிலேயே மூழ்கி இருப்பது ஒன்றே சிவனே என்றிருப்பது. என பொருள்படும்.

அன்பே🔥சிவம்

மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான்

மகாபாரதத்தில், கர்ணன் கிருஷ்ணரைக் கேட்டான் - "என் தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டுவிட்டார் முறைதவறிப் பிறந்த குழந்தை என்றார்கள் இது என் தவறா?

நான் சத்ரியன் அல்ல என்று கூறி துரோணாச்சாரியார் எனக்கு கல்வியைக் கற்றுத்தரவில்லை இது என் தவறா?

பரசுராமர் எனக்கு கற்றுக் கொடுத்தார், ஆனால் சத்ரியன் எனக்கூறி நான் படித்த எல்லாவற்றையும் மறக்க என்னை சாபம் கொடுத்தார் இது என் தவறா?

ஒரு பசு தற்செயலாக என் அம்பு மூலம் தாக்கப்பட்டது அதன் உரிமையாளர் என்னுடைய தவறுக்காக என்னை சபித்தார்.

திரௌபதியின் சுயம்வரத்திலே நான் தேரோட்டியின் மகன் என்பதற்காக நான் அவமானப்படுத்தப்பட்டேன்

குந்தி கூட இறுதியாக தன் மற்ற மகன்களை காப்பாற்ற மட்டுமே என்னைத் தேடி வந்தார்.இப்படி சுற்றி இருப்பவர்கள் அனைவராலும் வஞ்சிக்கப்பட்ட போது துரியோதனனின் அன்பு மூலமாகவே எனக்கு எல்லாம் கிடைத்தது ஆகையால் அவன் பக்கம் நான் நிற்பது எப்படி தவறாகும் எனக் கேட்டான்

அதற்கு கிருஷ்ணன் பதிலாக "கர்ணா நீயாவது பரவாயில்லை ஆனால், நான் ஒரு சிறையில் பிறந்தேன்.என் பிறப்புக்கு முன்பே மரணம் காத்திருந்தது.நான் பிறந்த இரவு அன்றே என் பெற்றோரிடமிருந்து நான் பிரிக்கப்பட்டேன்.

நீ சிறுவயதிலிருந்து , வாள், இரதங்கள், குதிரைகள், வில், அம்புகள் ஆகியவற்றின் இரைச்சலை நீங்கள் கேள்விப்பட்டிருப்பாய் ஆனால் . நானோ மாடு கொட்டில் சாணம் வைக்கோல் இவைகளுக்கிடையே வளர்ந்தேன் நடக்க ஆரம்பிக்கும் முன்னே என்னைக் கொல்ல பல முயற்சிகள் நடந்தன

நல்ல கல்வி இல்லை இராணுவ பயிற்சி இல்லை ஆனால் எல்லோரும் நான்தான் நடக்கும் பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் என்கிறார்கள்.

நீங்கள் ஆசிரியர்களால் மதிக்கப்படுகிறபோது நான் எந்தக் கல்வியையும் பெறவில்லை. நான் 16 வயதில் தான் ரிஷி சாண்திபனியின் குருகுலத்தில் சேர்ந்தேன்!

நீங்கள் விரும்பிய ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள். ஆனால் நானோ நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்யாமல் என்னை நேசித்த பெண்களை மேலும் கொடியவர்களிடம் இருந்து நான் காப்பாற்றிய பெண்களை திருமணம் செய்துகொண்டேன்.

ஜராசந்த்திடமிருந்து என் மக்களைக் காப்பாற்றுவதற்காக, யமுனா நதிக்கரையிலிருந்து கடலிலிருந்து தூரத்திலிருந்து என்னுடைய முழு சமூகத்தையும் நகர்த்த வேண்டியிருந்தது. நான் ஓடிப்போன ஒரு கோழை!

துரியோதனன் போரில் வெற்றி பெற்றால், உனக்கு நிறைய பொருள் நாடு சேனை கௌரவம் கிடைக்கும். ஆனால் பஞ்சபாண்டவர் உடன் சேர்ந்து யுத்தம் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்?

கண்ணன்தான் இந்த போருக்கு காரணம் என்ற குற்றச்சாட்டு மட்டுமே மிஞ்சும்

கர்ணா ஒன்றை நினைவில் கொள் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் சவால்கள் உள்ளன.

வாழ்க்கை எப்போதுமே இலகுவாகவும் எளிதாகவும் இருப்பதில்லை.ஆனால் மனசாட்சிப்படி தர்மத்தின்பால் நிற்பதே சரியானதாகும் . எத்தனை முறை நாம் ஏமாற்றப்பட்டோம், எத்தனை முறை நாம் அவமானப்படுதப்பட்டோம், எத்தனை முறை வீழ்ச்சி அடைகிறோம் என்பது முக்கியமானத அல்லஅந்த நேரத்தில் நாம் எப்படி மீண்டு எழுந்தோம் என்பதே முக்கியமானது.

நம் வாழ்க்கையில் நடக்கும் தவறுகள் நம்மை தவறான பாதையில். போவதற்காக உரிமையைக் கொடுக்கவில்லை

எப்போதும் நினைவில் கொள் வாழ்க்கை எனபது ஒரு பாதை சில நேரங்களில் கரடுமுரடாக இருக்கலாம் அதைக் கடப்பது நம் காலணிகளால் அல்ல நாம் எடுத்து வைக்கும் அடிகள் மூலமே

Thursday, November 7, 2019

ராஜராஜன் சோழன் காலத்தில்

ராஜராஜன் சோழன் காலத்தில்... அவர் உயிருடன் இருக்கும் போதே... தஞ்சை கோயிலில் அவருக்கு நிர்மாணிக்கப்பட்ட சிலை இது...
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு... ஆண்கள் மட்டுமல்ல... பெண்களும் பூணூல் அணியும் வழக்கம் இருந்துள்ளது.

ராஜராஜ சோழன் முப்பிரிகள் கொண்ட பூணூலும்...
அவரின் மனைவி ஒரு பிரி கொண்ட பூணூலும் அணிந்திருக்கிறார்கள்.
ஆனால்... கீழே அமர்ந்திருக்கும் ராஜேந்திர சோழனிடம் பூணூல் இல்லை.
பூணூல் என்பது குறிப்பிட்ட வயதோ... பயிற்சியோ... பதவியோ... பெற்ற பின் அணியும் வழக்கம் இருந்திருக்க வேண்டும். அல்லது முக்கிய நிகழ்வுகளின் போது மட்டும் பூணூல் அணியும் வழக்கம் இருந்திருக்க வேண்டும்.

மேலும் பெண்கள் காது வளர்த்து... காதை நீளமாக்கி... அணிகலன் அணியும் வழக்கமும் இருந்திருக்கிறது. காதணி அணியும் வழக்கம் இந்து மதத்தில் மட்டும் உள்ள வழக்கம். ராஜராஜ சோழன் காதிலும் காதணிகள் உள்ளன.
கைக்காப்புகள், மோதிரங்கள் அணியும் வழக்கமும் இருந்திருக்கிறது.
ராஜராஜ சோழனின் மணிமகுடத்தில்... புலி முக உருவமோ... யாளி முக உருவமோ பொறிக்கப்பட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது.
அணிகலனின் நுணுக்க வேலைப்பாடுகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செல்வச்செழிப்பு வீரம் கலை நாகரீகம் ஆன்மீகம் அறம் என சொழித்தோங்கிய நிலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே பெருமையாக உள்ளது.

#ராஜராஜசோழன்_1034சதயவிழா...

Tuesday, November 5, 2019

tamailan

வாழ்க்கையில் எந்த விதமான பிரச்சனைகள் இருந்தாலும் சித்தர்களால் தீர்க்க முடியும் உண்மை...

18 சித்தர்கள் மூல மந்திரம்:

18 சித்தர்கள் மூல மந்திரம்:

சித்தர்களின் மந்திரத்தை எவர் ஒருவர் ஜெபிக்கிறாரோ அவருக்கு சித்தர்களின் பரிபூரணம் அருள் கிடைக்கும்.

அகத்தியர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி

போகர் மூல மந்திரம்

ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி

திருமூலர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி

இடைக்காடர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி

கருவூரார் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி

கோரக்கர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி

குதம்பை சித்தர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி

பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி

சட்டைமுனி மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி

மேலும் சுவாரசியமான தகவல்களுக்கு புதிய குழுவில் இணையவும்
https://www.facebook.com/groups/432063990475489/

 சிவவாக்கியர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி

சுந்தரானந்தர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி

கொங்கணர் மூல மந்திரம்

ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி

வான்மீகர் மந்திரம்

ஓம் வான்மீகர் திருவடிகள் போற்றி

கமலமுனி மந்திரம்

 ஓம் கமலமுனி திருவடிகள் போற்றி

மச்சமுனி மந்திரம்

ஓம் மச்சமுனி திருவடிகள் போற்றி

பதஞ்சலி மந்திரம்

ஓம் பதஞ்சலி முனிவர் திருவடிகள் போற்றி

இராமத்தேவர் மந்திரம்

ஓம் இராமத்தேவர் திருவடிகள் போற்றி

தன்வந்த்ரி மந்திரம்

ஓம் தன்வந்த்ரி திருவடிகள் போற்றி

tamailan


இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,

இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
  மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

 கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                          
விக்கலுக்கு மயிலிறகு
   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
   வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
   நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
   விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!

Monday, November 4, 2019

1800 களில் வெளிவந்த புத்தகத்தில் வள்ளுவர் புகைப்படம்

திராவிட கட்சிகளின் கூட்டம் ஒரே ஒரு உண்மையை கூட கூறாமல் நம்மை ஏமாற்றி வந்துள்ளனர்

பதினைந்து வருடத்திற்கு முன்பு நடந்தது,

பதினைந்து வருடத்திற்கு முன்பு நடந்தது, வெள்ளியங்கிரி செல்வதற்கு  நானும் சில நண்பர்களும் கூடி  மே 1 தேதி செல்ல முடிவெடுத்தோம்.
ஆனால் பயணதேதிக்கு இரண்டு நாள் இருக்க பணி செய்து கொண்டிருக்கும் போது, ஒரு தடிமனான இரும்பு உரJioுளை வலது கால் பெருவிரலில்  விழுந்து கடுமையான காயம் ஏற்பட்டு விட்டது.௭ன் குடும்ப சூழ்நிலை வெள்ளியங்கிரி ஆண்டவனுக்காக விரதமும் இருந்து வருகிறன்,  மருத்துவர்கள் காயம் ஆற 10 நாள் ஆகும் ௭ன்று விட்டார்கள் ,௭னக்கோ தர்ம சங்கடமும் கவலையும் வந்துவிட்டது.
      நண்பர்களுடன் சேர்ந்து செல்வதால், அவர்களிடம் ௭னக்கு காயம் ஆன விவரத்தை கூறி,  விரதமிருப்பதால் சாமியை பார்க்காமல் ௭ன் விரதத்தை முடிக்க முடியாது ஆதலால் ௭ன்னை பத்திரமாக அழைத்து செல்ல உதவ வேண்டும் ௭ன்று கேட்டுக்கொண்டேன். அவர்களும் உடனடியாக சம்மதித்து விட்டார்கள்.
    பயண தேதியும் வந்தது, நான் வீட்டில் பூஜை செய்து அந்த கைலாயனை மனதார பிராதித்துவிட்டு பின்பு ௭னது தந்தையிடம் ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டு வீட்டைவிட்டு கிளம்பினேன். காலை தாங்கி தாங்கி நடந்து கொண்டு ௭னது நண்பர்களுடன் புறப்படும் இடத்திற்கு வந்தேன், அங்கே ஒருவரும் வரவில்லை அப்போது என்னிடம் மொபைலும் இல்லை வெகு நேரமாகியும் ஒருவரும் வரவில்லை.அப்போது பக்கத்து கடைக்காரர் தம்பி அவங்கள்ளாம் உன்னை காயத்தோட கூட்டி செல்வதால் அவர்களுக்கு சிரமமாக இருக்கும் ௭ன்று உன்னை விட்டுவிட்டு நேரமாகவே சென்றுவிட்டார்கள்,கடுமையான கூட்டமிருக்கும்போது நீயும் மலைக்கு இந்த காயத்துடன் செல்வது முடியாது ,நீ இன்னொரு நாள் செல்வதுதான் நல்லது ௭ன்றார்.
   நான் தர்மசங்கடமான நிலையில் நின்றேன், வீட்டிற்கு திரும்பி சென்றால் ௭ல்லோரும் வருத்தப்படுவார்கள். பின்பு நான் ஒருவாறு மனதை தேற்றிக்கொண்டு இப்படியே கிளம்பி சென்று மலையடி வாரத்தில் தங்கிவிட்டு மறு நாள் வீட்டுக்கு திரும்பி வரலாம் ௭ன்று கிளம்பிவிட்டேன்.
  இரவில் அடிவாரம் சென்று அங்கே ஶ்ரீ மணோன்மணி உடனுறை வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்து விட்டேன்,பின்பு அங்கே மண்பத்தில் படுக்கலாம் ௭ன்று நினைத்தபோது , மலையேர வரும் பக்தர்கள் அனைவரும் ஒரு கடையில் மூங்கில் கம்பு வாங்கி செல்வதை பார்த்தேன் ,மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களில் அர்ச்சுனனுக்கு சிவன் பாசுபத அஸ்திரம் வழங்கியது வெள்ளியங்கிரி மலையில்தான் ஆதலால் இ்ந்த மூங்கில் கம்பும் அதன் வடிவம்தான் ௭ன்று ௭ண்ணி, நானும் ஒரு கம்பை வாங்கிக்கொண்டு மனதுக்குள் வைராக்கியத்துடன் இறைவனை பிராத்தித்துவிட்டு  தென் கையிலாயத்தின் முதல் மலை மேல் மெதுவாக ஏற ஆரம்பித்துவிட்டேன் .
   முதல் மலையில் படிக்கட்டு பாதைதான் ஆனால் அதற்கு மேல் ஆறுமலைகளின் பாதைகளும் சரிவுகளும்  கற் பாறைகளுமானது.௭னக்கோ கால் பெருவரலில் நகக்கண்ணுடன் சேர்த்து வெட்டுப்பட்டுள்ளதால் ௭ந்த இடத்திலும் கால்  விரல் மோதிவிடாமல் கவனமாக ஏற வேண்டியிருந்தது ,நிதானமாக இரவு நேரத்தில் அரை நிலா வெளிச்சத்தில் முதல் மலையின் உச்சியை நெருங்கும் நேரத்தில் ,
ஒரு இடத்தில் இருவர் உரக்கமாக பேசிக்கொண்டிருந்தனர்.
    'தம்பி ,இதற்கு மேல் ௭ன்னால் மலையேற முடியாது ,நீ வேண்டுமானால் மலையேறி சாமிய பாத்துட்டுவா.
' அண்ணா,அது ௭ப்படின்னா முடியும் உம் பேச்ச கேட்டு நீ  கூட இருக்கற தைரியத்துல டார்ச்லைட்டும் ௭டுக்கல ,மூங்கில் கம்பும்  வாங்கல ,நான் மட்டும் ஒத்தைல ௭ப்படி மலையேரறது?!வாங்க கீழ இறங்குவோம்!
  'தம்பி ,நான் இருக்கற நிலயில ஒரு அடி மேலயும் போமுடியாது,கீழயும் இறங்க முடியாது ,நீ வேணா ௭ங்கூட படுத்து தூங்கு  காலைல நாம இரண்டு பேரும் கீழ இறங்கி போயரலாம்
   இப்படியாக உரையாடிக் கொண்டிருந்தவர்கள் குரல் ௭னக்கு பரியச்சமான குரலாக தெரிந்தது, நெருங்கிப் பார்த்தால் ௭ன்னை விட்டுச்சென்ற அண்ணன் தம்பி இருவர்.நான் அவர்களிடம் சென்று நின்றேன் ,அவர்கள் ௭ன்னை கண்டவுடன் குழப்பமுமாக பார்த்தார்கள் , ௭ங்களாலேயே ஒரு மலை ஏறவே சிரமமாக உள்ளதே, நீ ௭ப்படி இவ்வளவு தூரம் வந்தாய் ௭ன்று கேட்டார்கள் ,உன்னை விட்டு விட்டு வந்ததற்கு ஆண்டவன் ௭ங்களை தண்டித்து விட்டான்  ,௭ங்களை மன்னித்துவிடு ௭ன்றார்கள்.
 மேலும் அவர்களில் தம்பி மட்டுமே ௭ன்னுடன் மலைக்கோயிலுக்கு வர விரும்பினார்,நான் அவரிடம் ௭ன்னுடய டார்ச லைட்டைக்கொடுத்து முன்னே செல்லுங்கள் உங்களை பின் தொடர்ந்து  நான் வருகிறேன் ௭ன்றேன்,அதற்கு அவரோ நீங்கள் முன்னே செல்லுங்கள் நான் உங்கள் பின் வருகிறேன் என்றார்.
    அதிகாலை நானும் அவரும் மலை உச்சியை அடைந்து தென்கயிலா நாதனை சிறப்பாக தரிசித்தோம்.௭ன் கண்களில் பக்தி பரவசத்தால் ஆனந்தக் கண்ணீர் வந்தது ,அப்போதுதான் ௭னக்கு ஒரு ஞாபகம் வந்தது  இரவு முழுதும் ஏழு மலை ஏறி வந்த ௭ன் கால் விரலில் ஒரு சின்ன கல்லாலோ அல்லது பெரும் பக்தர்கள் கூட்டத்தால் நிறைந்த இந்த கைலாய மலையில் யாருடய காலும் ௭ன் காயத்தின் மீது படவோ  இல்லயே!!? மிகவும் ஆச்சரியத்துடனும் ஈசனின் கருணையை மனதில் ௭ண்ணி கசிந்துருகிய நெஞ்சத்துடனும் மலையை விட்டி கீழே இறங்க துவங்கினேன்.
   மலையைவிட்டு இறங்கியதும் சிவ பக்தர்களின் அன்னதானம் ௭ன்வயிற்றை ஆனந்தமாக நிறைத்தது ,நான் களைப்பில் அப்படியா பந்தலில் ஒரு இடத்தில் அயர்ந்து தூங்கிவிட்டேன், பின் விழித்து பார்த்தபோது மாலை ஆகிவிட்டது , சரி வீட்டுக்கு கிளம்பலாம் ௭ன்று ௭ண்ணி பஸ் ஏறப்போகும் முன்  ௭ன் காலைப்பார்த்தேன்,அதில் காயத்திற்க்காக போட்டிருந்த கட்டின் மேல் மலை ஏறியதால் மண்ணும் சேறுமாக இருந்தது ,உடனே  வேறு துணிவைத்து கட்ட கட்டை பிரித்தேன்,அங்கே ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அவ்வளவு ஆழமான வெட்டு காயம் காணவேயில்லை !!நான் பூலோகத்திலா அல்லது  வேறு மாய லோகத்திலா ௭ன்று வியந்தேன் பலமுறை அடியாருக்கும் அடியாரான சிவனை போற்றி தொழுதேன்,
     ஓம் நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க .!
தென்னாடுடய சிவனே போற்றி! ௭ந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
              திருச்சிற்றம்பலம் 

"ஐந்தவித்தான் ஆற்றல்

" தெரிஞ்சுகோங்க மக்கா!"
""""""""""""""''"'"""""""""""""""""""""""""""""""""""""
"ஐந்தவித்தான் ஆற்றல் அகல்          விசும்பு ளார்கோமான் இந்திரனே சாலுங் கரி" இதில் வரும் "இந்திரன்" யார்????

"அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந் திறனறிந் தாங்கே "திரு" இதில் திரு என்று அழைக்கப்படும் மாஹாலக்ஷ்மி யார்????

"மடியிலா மன்னவன் எய்தும் "அடியளந்தான்" தாஅய தெல்லாம் ஒருங்கு" இதில் மூன்று அடியால் உலகளந்த அடியளந்தான் யார்?????

துரதிர்ஷ்டவசமாக தமிழர்களை தமிழை தவிர வேறு எந்த மொழியையும் சரிவர கற்க முடியாமல் செய்துவிட்டனர். பின்னர் திராவிட ஆட்சியில் தமிழையும் சரிவர கற்பிக்காமல் திரைப்பட மோகத்தில் தமிழர்களை ஆழ்த்தி தமிழையும் மறக்கடித்து விடுவது தான் இவர்களின் உள்நோக்கம். சில நாட்களுக்கு முன் ஐயன் வள்ளுவர் ஒரு கிருத்துவர் என்று ஒரு கும்பல் கம்பு சுற்றியது. யார் என்ன சொன்னாலும் அதை நம்பும் மனநிலைக்கு வந்துவிட்ட தமிழர்கள் நாளை அதுவே உண்மை என்றும் நம்பக்கூடும்.
முத்தியும் பிறவிதான். தொல்லைப் பிறவி தொலைத்தபின் முத்தியென்ன? முருங்கைக்காயென்ன?

தினம் ஒரு மூலிகை மருத்துவத்தில் இன்று சதகுப்பை பற்றி பார்ப்போம்

தினம் ஒரு மூலிகை மருத்துவத்தில் இன்று சதகுப்பை பற்றி பார்ப்போம்
1,  கருப்பை பலமடைய
சதகுப்பை,கருஞ்சீரகம்,மரமஞ்சள் இவற்றை சம அளவு  அரைத்து பனைவெல்லம் சேர்த்து 5 கிராம் காலை,மாலை சாப்பிட்டு வர கருப்பை பலமடையும்.
2,  கர்ப்பப்பை கோளாறு குறைய
கர்ப்பப்பை கோளாறு குறைய சதகுப்பைக் கீரையை சீரகம், மிளகு, பூண்டு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட கர்ப்பப்பை கோளாறு குறையும்.                    3,    கர்ப்பப்பை கோளாறு குறைய
கர்ப்பப்பை கோளாறு குறைய சதகுப்பைக் கீரையை சீரகம், மிளகு, பூண்டு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட கர்ப்பப்பை கோளாறு குறையும்.
4, ஜீரன சக்தியை அதிகரிக்க
சதகுப்பை விதையை கொதிக்க வைத்து சர்க்கரை சேர்த்து வடிகட்டி கொடுப்பதால் குழந்தைகளுக்கு ஜீரன சக்தியை தூண்டும்.
5,  தாய்ப்பால் சுரக்க
தாய்ப்பால் சுரக்க சதகுப்பை கீரையை உணவில் அதிகமாக சேர்த்து கொண்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
6,  வயிற்றுப் பொருமல் குறைய
வயிற்றுப் பொருமல் குறைய சதகுப்பைக் கீரையுடன் சோம்பை அரைத்துச் சாப்பிட வயிற்றுப் பொருமல் குறையும்.
7,  இரத்த அழுத்த நோய் குறைய
இரத்த அழுத்த நோய் குறைய கருங்காலிப்பட்டை, சத குப்பை, சீரகம், ஏலக்காய் ஆகியவற்றை வறுத்து தூள் செய்து சுண்டவைத்து சாப்பிட இரத்த அழுத்த நோய் குறையும்.
8,  இரத்த சோகை குறைய
இரத்த சோகை குறைய சதகுப்பை விதைகளை பொடி செய்து கொத்தமல்லி இலைச்சாறில் கலந்து குடித்து வந்தால் இரத்த சோகை குறையும். மேலும் பெண்கள் மாதவிடாய் நேரத்தில் இதை குடித்து வந்தால் இரத்தம் விருத்தியடையும். உடல் பலம் பெறும்.
9,   கபம் குறைய
சதகுப்பை இலைகளை உலர்த்தி காய வைத்து பொடி செய்து அந்த பொடியை நீரில் கலந்து அருந்தினால் கபம் குறையும்.      * 10,  பசி உண்டாக
மிளகு, சுக்கு, சதகுப்பை, ஏல அரிசி, தேன் அனைத்தையும் இடித்து வடிகட்டி வடிகட்டிய தூளை தேன் சேர்த்து சாப்பிட்டால்முறையாக பசி ஏற்படும்.
11,  வயிற்று வலி குறைய
ரோஜாப்பூ மொட்டு மற்றும் சதகுப்பை ஆகியவற்றை இடித்து சுடு நீரில் போட்டு மூடி வைத்திருந்து வடிகட்டி கொடுத்துவர வயிற்று வலி குறையும்.
12,  வாதநோய் குறைய
சதகுப்பை இலைகளை சமைத்து சாப்பிட்டு வந்தால் வாத நோய்கள் குறையும்.
13,  காய்ச்சல் குறைய
இஞ்சி மற்றும் புதினா கீரை சாறுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் காய்ச்சல் குறையும்.கவி நாட்டு மருந்து
14,  காய்ச்சல் குறைய
பற்பாடகம், நிலவேம்பு,சீரகம்,சுக்கு,அதிமதுரம் இவைகளை நைத்து சுண்டக்காய்ச்சி குடித்து வர காய்ச்சல் குறையும்.

Saturday, November 2, 2019

தினம் ஒரு மூலிகை மருத்துவத்தில் இன்று வாழை பூ பற்றி பார்ப்போம்

தினம் ஒரு மூலிகை மருத்துவத்தில் இன்று வாழை பூ பற்றி பார்ப்போம்
1,  வயிற்றுப் புண்
வாழைப்பூவை வாரம் ஒரு முறை கூட்டாக செய்து சாப்பிட்டு வர வயிற்றுப் புண் ஆறும்.
2,   நீரிழிவு நோய்
வாழைப்பூவை வேக வைத்து அல்லது பொரியல் செய்து சாப்பிட நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணம் அகலும்.
3,  ஆண்களின் தாதுப் பிரச்சனைக்கு
வாழைப்பூவை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர தாது பெருகும்.
4,  கை மற்றும் கால் எரிச்சல் குணமாக
வாழைப்பூவை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர கை மற்றும் கால் எரிச்சல் குணமாகும்.
5, அதிக இரத்தப்போக்கு குறைய
அதிக இரத்தப்போக்கு குறைய வாழைப்பூவை எடுத்து நீர் விட்டு பூ மென்மையாக மாறும் வரை நன்றாக காய்ச்சி பிறகு நீரை வடிகட்டி நீக்கி விட்டு பூவை நன்றாக கசக்கி பிசைந்து தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கு குறையும்.
7,  இரத்தம் தூய்மையாக
இரத்தம் தூய்மையாக வெந்தயக் கீரை, வாழைப்பூ, மிளகு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் இரத்தம் தூய்மையாகும்.
8,   நுரையீரலில் சளி, இருமல் குறைய
நுரையீரலில் சளி, இருமல் குறைய வாழைப்பூச் சாறுடன் ஒரு தேக்கரண்டி தேனும், அரைத் தேக்கரண்டி நெய்யும் சேர்த்து காலை வேளையில் கொடுத்து வருதல் நலம்
9,  சிறுநீரக கோளாறுகள் குறைய
வாழைத்தண்டு, வாழைப்பூ, நாவல்பழம், தர்பூசணி, திராட்சை, முட்டைக்கோஸ், ஆப்பிள், வெள்ளரி, கேரட், இளநீர், முருங்கை, நெல்லி, எலுமிச்சை இவைகளை சாப்பிட சிறுநீரக கோளாறுகள் குறையும்.
10,   சீதபேதி குறைய
கறிவேப்பில்லை, சீரகம், வாழைப்பூ இவைகளை அரைத்து சாறெடுத்து தேன் கலந்து குடிக்க சீதபேதி குறையும்.
11,  மாதவிடாய் கோளாறுகள் குறைய
தும்பை இலை, கீழா நெல்லி இலை ஆகியவற்றை சம அளவாக எடுத்து அரைத்து ஒரு டம்ளர் பாலில் சுண்டைக்காய் அளவு கலந்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறுகள் குறையும்.
12,  மூலம் குறைய
வாழைப்பூ சாறுடன் சீரகம் சேர்த்து குடிக்க மூலம் குறையும்.
13,  மூலம் குணமாக
வாழைப்பூ சாறு ,கடுக்காய் பொடி சேர்த்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
14,  அஜீரணம் குறைய
வாழைப்பூவை வேக வைத்து அல்லது பொரியல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்.