Wednesday, January 28, 2015

The aloe vera miracle:

The aloe vera miracle: A natural medicine for cancer, cholesterol, diabetes, inflammation, IBS, and other health conditions...Must Share

• Halts the growth of cancer tumors.
• Lowers high cholesterol.
• Repairs "sludge blood" and reverses "sticky blood".
• Boosts the oxygenation of your blood.
• Eases inflammation and soothes arthritis pain.
• Protects the body from oxidative stress.
• Prevents kidney stones and protects the body from oxalates in coffee and tea.
• Alkalizes the body, helping to balance overly acidic dietary habits.
• Cures ulcers, IBS, Crohn's disease and other digestive disorders.
• Reduces high blood pressure natural, by treating the cause, not just the symptoms.
• Nourishes the body with minerals, vitamins, enzymes and glyconutrients.
• Accelerates healing from physical burns and radiation burns.
• Replaces dozens of first aid products, makes bandages and antibacterial sprays obsolete.




• Halts colon cancer, heals the intestines and lubricates the digestive tract.
• Ends constipation.
• Stabilizes blood sugar and reduces triglycerides in diabetics.
• Prevents and treats candida infections.
• Protects the kidneys from disease.
• Functions as nature's own "sports drink" for electrolyte balance, making common sports drinks obsolete.
• Boosts cardiovascular performance and physical endurance.
• Speeds recovery from injury or physical exertion.
• Hydrates the skin, accelerates skin repair.

Share it with others

Sunday, January 25, 2015

கலியுகம் - இந்தியாவின் வரலாறு!

கலியுகம் - இந்தியாவின் வரலாறு!
கலியுகம் பிறந்த பின்னர் பாரத நாட்டை யார் யார் எல்லாம் ஆள்வார்கள், எத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருப்பார்கள் என்கிற விவரங்களைக் கூட கோரக்கர் தனது நூலில் விளக்கியிருக்கிறார்.

"பழியில்லா பரீட்சித்து ஐந்நூறே ஆண்டான்
பரிவாக சனமேசெயன் முந்நூறாண்டான்
இழிவில்லா நரேந்திரனாம் என்ற மன்னன்
இரண்டு நூற்றெண்பத் தெட்டாக ஆண்டான்
செழிப்பாக சாரங்கன் எண்பத் தைந்து
செகமுழுவதும் விக்கிரமாதித்த வேந்தன்
வேந்தனவன் இரெண்டாயிரம் ஆண்டதப்பால்
வினயமுற்றுச் சாலிவாகனனும் தோன்றிப்
பாந்தமிகு முன்னூற்று நாற்பத்தொன்பது
ஆண்டுஅகிலம் அரசுரிய செங்கோலோச்சி
எந்துகங்குல் நற்போசன் ஐநூ றாண்டான்
சுப்பராயலு அறுநூற்றுத் தொண்ணூற்றைந்து
போந்தவே கர்த்தாக்கள் எண்பத் தைந்து
பிறைஇசுலாம் அறுபத்து இரெண்டாண்டு"

- சந்திர ரேகை -

"ஒருமையில்லா ஆழிக்கரைக்கு அப்பாலுற்றோன்
ஓதுஅந்தப் பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன்
பெருமாவ்யுடன் எழுபத்து மூன்றதாண்டு
பேதமற ஆண்டிடவே இவன் சார்புற்றோன்
கருமையில்ல வெள்ளை நிறமாகத்தானே
கபடுற்று கவர்ந்து தொண்ணுற்றுறாறதாண்டு
வறுமைசெய்து ஆண்டபின் இது குலத்தான்
வந்திடுவன் விஜயன்போன்றோர் அரசன்
தோன்றி ஈருறவு நாற்பது வருடமாகும்
துறைதவறா முறைபிசகா திருந்துஓங்கும்
மேன்மை பெற இதுகடந்த நாள்துய்ய
ஆன்மநலம் அறிந்த கிள்ளுநாமக்காரர்
அகிலசக்கர கொடியுடனே அழியாமல்
பான்மையுடன் அரசாள நான் மட்டல்ல
பகரவில்லை சிவனேந்திரமாமுனியும் சொன்னார்"

- சந்திர ரேகை -

இந்த பாடல்களின் படி பாரத தேசத்தை ஆட்சி செய்தவர்களின் பெயரையும், ஆண்டுகளையும் பட்டியலிட்டால்......

ஆட்சியாளர்கள்
ஆண்டு
பரீட்சித்து மன்னன்
500
சனமேசெயன்
300
நரேந்திரன்
288
சாரங்கன்
85
விக்கிரமாதித்தன்
2000
சாலிவாகனன்
349
போசனராசன்
500
சுப்பராயலு
695
கர்த்தாக்கள்
85
இஸ்லாமியர்
62
பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன்
73
பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன்
96
பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன்
40

இதன் பின்னர் கிள்ளுநாமக்காரர் கலி முடியும்வரை ஆட்சி செய்வர் என்கிறார்....

இந்த பட்டியலில்..

"ஒருமையில்லா ஆழிக்கரைக்கு அப்பாலுற்றோன்
ஓதுஅந்தப் பறட்டையன் செம்மூஞ்சி சுக்கன்" 73 ஆண்டுகள்

"இவன் சார்புற்றோன்கருமையில்ல வெள்ளை
நிறமாகத்தானே கபடுற்று கவர்ந்து வறுமைசெய்து ஆண்டபின்" 96 ஆண்டுகள்

"வறுமைசெய்து ஆண்டபின் இது குலத்தான்
வந்திடுவன் விஜயன் போன்றோர் அரசன்" 40 ஆண்டுகள்

இவ்வாறு குறிக்கப்படும் ஆட்சிக்காலம் ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட காலமாகக் கொள்ளலாம், மொத்தமாக 209 ஆண்டுகள் என்று கோரக்கர் குறிப்பிடுகிறார். ஆங்கிலேயர்கள் இந்திய நாட்டை எறத்தாழ 200 ஆண்டுகளுக்கு மேல் ஆண்டமை எல்லொருக்கும் தெரிந்ததே..கோரக்கர் கூறியுள்ள கணக்கின் படி இந்தியா சுதந்திரம் அடைந்த போது கலியுகத்தின் வயது 5073 ஆண்டுகளாகும்.

கடைசியாக ஆங்கிலேயரின் ஆட்சிக்குப் பின்னர் "ஆன்மநலம் அறிந்த கிள்ளுநாமக்காரர் அகிலசக்கர கொடியுடனே அழியாமல் பான்மையுடன் அரசாள" என்று குறிப்பிட்டுள்ளார். இங்கே "ஆன்மநலம் அறிந்த கிள்ளுநாமக்காரர்" என்பது அநேகமாய் மகாத்மா காந்தியையும் "அகிலசக்கர கொடியுடனே" என்பதை அசோகச்சக்கரம் பொறித்த இந்தியக் கொடி என்பதாக அனுமானிக்கலாம்.

இந்தச் எதிர்வு கூறல்களை தான் மட்டுமல்லாது சிவனேந்திரமாமுனியும் சொல்லியுள்ளார் என்று கோரக்கர் குறிப்பிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. ஆக பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் இந்திய நாட்டை ஆங்கிலேயர்கள் முதல், சுதந்திரம் பெற்ற இந்தியாவை மகாத்மா காந்தியும், அவர் வழியில் வந்தவர்களும் அதாவது சனநாயக ஆட்சி முறையில் ஆள்வர் என்று எதிர்வு கூறியிருப்பது ஆச்சர்யமான செய்தி!

தமிழன் வருவான்

இந்த உலகிற்கு முதன்முதலில் அறுவை சிகிச்சையை


இந்த உலகிற்கு முதன்முதலில் அறுவை சிகிச்சையை அறிமுகப் படுத்தியவர்கள் ‘இந்தியர்கள்’ – ஆச்சரியத் தகவல்

இந்த உலகிற்கு முதன்முதலில் அறுவை சிகிச்சையை அறிமுகப் படுத்தியவர்கள் ‘இந்தியர்கள்’ அறுவை சிகிச்சையின் தந்தை சுஸ்ருதர் (காலம் கி.மு. 600) சுஸ்ருதர், உலகளவில்
அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மருத்துவமாமேதை.

இவர் ரிஷி விஸ்வாமித்திரருக்குப் பிறந்தவர். உலகின் முதல் அறுவை சிகிச்சை கலைக் களஞ்சியமான “சுஸ்ருத சம்ஹிதை யை” மனித சமுதாயத்திற்க்குக வழங்கியவர். மயக்க மருந்து அ றிவியல் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தையாகப் போற்ற ப்படுபவர்.

இவர் தமது சுஸ்ருத சம்ஹிதையில், பன்னிரண்டு விதமான எலு ம்பு முறிவுக்கும், ஆறு விதமான மூட்டு நகர்வகளுக்கும் உண்டா ன மருத்துவ முறையை விளக்கிருக்கிறார். 125 விதமான அறு வை சிகிச்சை கருவிகளை உபயோகப்படுத்தியுள்ளார்.





இதில் ஊசிகள், கூர் கத்தி, ரண சிகிச்சைக்கான சிறிய கத்திகள், இரட் டை விளிம்பு கத்திகள், வடிக்கும் ரப்பர் குழாய் மற்றும் மலக்குட ல் சீரமைப்புக் கருவிகள் போன்றவை விலங்கு மற்றும் பறவை களின் தாடைஎலும்புகளில் இருந்து வடிவமைக்கப்பட்டவை .

இவர் மேலும் பல்வேறு தையல் முறைகளைப்பற்றியும் விளக்கி யுள்ளார். குதிரையின் முடி, மரப்பட்டைகளின் இழை, நரம்பு போ ன்றவற்றை நூலாக்க் கொண்டு தைத்திருக்கிறார். சுஸ்ருத சம் ஹிதையில், 300 விதமான அறுவை சிகிச்சை முறைகள் விள க்கப்பட்டுள்ளன. 

ஆச்சார்யர் சுஸ்ருதர், மருத்துவ உலகின், குறிப்பாக அறுவை சிகிச்சையின் மாமேதை என்று போற்றப்படுகிறாா்

1. நாம் நல்லா இருக்க வேண்டும்




1. நாம் நல்லா இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடைய நான்கு பேர் நம்மை சுற்றி இருந்தால் , நாம் எத்தனை துன்பத்திலும் நல்லா இருப்போம்.

2. எவ்வளவு கடும் கோபத்திலும் பொறுமையாக இருக்கும் பக்குவம் வந்து விட்டால், நம்மால் எவர் மனமும் இரணமாகாது.

3. நமக்கு சந்தேகம் என கேள்வி கேட்கும் போது, கேட்பவரை எதிரியாக பார்த்துக் கொண்டே கேட்டால் அவர் சரியான பதிலையே சொன்னாலும் நம் தலையில் ஏறாது.

4. வேலி இல்லாக் காட்டில் பூவாக இருப்பதைவிட , வேலியிட்ட நந்தவனத்தில் பூவாக இருக்கும் சுதந்திரமே நமக்கு பாதுகாப்பானது.

5. எந்த விடயத்தையும் மதிப்பீடும் போது, நிறைகளைக் கூறி பின் குறைகளைச் சுட்டிக் காட்டினால், கேட்பவர் மனம் மகிழும்.

6. பெரிய பெரிய விடயங்களை புத்திசாலித் தனமாக பேசுவதை விட சிறிய சிறிய விடயங்களை கூட மனம் விட்டு பாராட்டுவதில் தான் உண்மையான பக்குவநிலை இருக்கிறது.

7. நாம் விரும்பும் எல்லாவற்றையும் செய்து சுயநலமாய் இருப்பதை விட, அடுத்தவருக்காய் செய்யும் செயலை விருப்பத்துடன் செய்து பொதுநலமாய் இருப்பது அர்த்தமானது.

8. நம்மை தேடி வழியன வரும் நல்லதை/உதவியை அப்படியே ஏற்பதற்கு முன் ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். ஒரு வேளை அது நமக்காக வீசப்படும் வலையாகக் கூட இருக்கலாம்.

காக்கைச் சிறகினிலே நந்தலாலா


காக்கைச் சிறகினிலே நந்தலாலா
நின்றன் கரியநிறம் தோன்றுதையே நந்தலாலா

நல்லதோர் வீனை செய்து அதை
நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ

நெருங்கின பொருள் கைபட வேண்டும்
மனதில் உறுதி வேண்டும்

வட்ட கரிய விழியில் கண்ணம்மா
வானக் கருனைக் கொள்

இந்த அழகிய வரிகள் எல்லாவற்றுக்குமே ஓர் ஒற்றுமையுண்டு அவை அனைத்துமே ஒரே பேனாவில் இருந்து உதிர்ந்த வரிகள் வரகவி என்று அழைக்கப்பட்ட ஒரு கவிஞரால் வடிக்கப்பட்ட கவிதைகள், சினிமாப் பாடல்களாக வந்ததால் அவை பெரும் புகழ்ப் பெற்றன ஆனால் சினிமா நமக்குக் காட்டாத இன்னும் பல அரிய கவிதைகளை தமிழ் உலகுக்கு தந்திருக்கிறார் அந்த அமரகவி அவர்தான் மீசைக் கவிஞன் என்றும் முண்டாசு கவிஞன் என்றும் தமிழ் இலக்கியம் உலகம் போற்றும் மகாகவி பாரதியார்.




அவருக்கு கவிதை என்ற வானம் வசப்பட்ட கதையைத் தெரிந்துகொள்வோம் 1882 ஆம் ஆண்டு டிசம்பர் 11ந்தேதி தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் என்னும் ஊரி சின்னச்சாமி அய்யருக்கும் இலக்குமி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் பாரதியார் அவருக்கு பெற்றோர் இட்ட இயற்பெயர் சுப்ரமணியன் சுப்பையா என அவரை செல்லமாக அழைத்தனர் சுப்பையாவுக்கு 5 வயதானபோது அவரது தாயார் இறந்து போனார் 2 ஆண்டுகள் கழித்து தந்தையார் மறுமணம் செய்து கொண்டார் சிறு வயதிலிருந்தே சுப்பையாவுக்கு மொழி மீது சிறந்த பற்றும் புலமையும் இருந்தது.

7 வயதிலேயே அவர் கவிதைகள் எழுதத் தொடங்கினார் அவருக்கு 11 வயதானபோது அவரது கவி பாடும் ஆற்றலையும் புலமையையும் வியந்து பாராட்டி அவருக்கு பாரதி என்ற பட்டத்தை வழங்கினார். எட்டயபுர மன்னர் அன்றிலிருந்து அவர் பெயர் சுப்ரமணிய பாரதி என்றானது பாரதி தமிழும் கவிதையுமாக தமிழுலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்க, அவரது தந்தையோ தனது மகன் தொழில்நுட்பத் துறையில் தேர்ச்சிப் பெற வேண்டும் என விரும்பி அவரை தமிழ்ப்பள்ளியில் சேர்க்காமல் ஆங்கிலமும் கணிதமும் பயில்வதற்காக திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தார். 

அங்கு சென்று கல்வி பயின்ற பாரதி படித்துக்கொண்டிருந்தபோதே செல்லம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார் தந்தை ஆனால் பின்னாளில் இது போன்ற பால்ய விவாகத்தை வன்மையாக கண்டித்தார் பாரதி. "பாலருந்தும் மழலையர் தம்மையே கோலமாக மணத்திடைக் கூட்டும் இப்பாதகர்கள் இன்னும் ஆயிராமாண்டு அடிமைகளாக இருந்து அழிவர்" என்று சபித்தார் நல்ல நிலையில் இருந்த பாரதியின் தந்தை எட்டயபுரத்தில் பருத்தி அரவை ஆலை நிறுவ விரும்பினார் அந்த ஆலைக்காக வெளிநாட்டிலிருந்து கப்பல்களில் வந்துகொண்டிருந்த இயந்திரங்களும் உதிரிப் பாகங்களும் கடலில் மூழ்கவே அவருக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.

அந்தக் கவலையிலிருந்து மீள முடியாமல் நோய்வாய்ப் பட்டு அவர் இறந்து போனார் அப்போது பாரதிக்கு வயது 16 தான் தந்தையின் மறைவிற்குப் பிறகு பாரதியின் குடும்பத்தில் வறுமை வந்து சேர்ந்தது பிறகு காசிக்குச் சென்று அலகாபாத் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து சமஸ்கிருதத்தையும் இந்தியையும் கற்றார். சமஸ்கிருத மொழியில் முதல் வகுப்பில் தேறினார் ஆங்கிலக் கவிஞர்களான ஷெல்லி, பைரன் போன்றோரின் கவிதைகளில் அவருக்கு அதிக ஈடுபாடு ஏற்பட்டது அதன்காரணமாக அவர் பின்னாளில் ஷெல்லிதாசன் என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

இந்தி சமஸ்கிருதம் தவிர்த்து ஆங்கிலம் பெங்காலி ஹச் போன்ற மொழிகளிலும் புலமைப் பெற்றிருந்தார் பாரதி அத்தனை மொழிகளில் புலமைப் பெற்றிருந்ததால்தான் “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்று துணிந்து சொன்னார்” பாரதி. தீண்டாமையை அறவே வெறுத்தவர் பாரதி அதற்கு தன்னையே முன் உதாரணமாக்கிக்கொண்டார் தீண்டாமை எனும் கொடுமைக்கு ஆளானோரிடம் அன்பு செலுத்தியதோடு அவர்களுக்கு இல்லாதது தனக்கு வேண்டியதில்லை என்று கூறி தான் அணிந்திருந்த பூ நூலை அறுத்தெரிந்தார்.

நான்கு ஆண்டுகள் காசியில் இருந்துவிட்டு திரும்பிய பாரதி எட்டயபுர மன்னரின் அழைப்பை ஏற்று அரசவைக் கவிஞாராக பணியாற்றினார். 1903 ஆம் ஆண்டு 21 ஆவது வயதில் அவரது எழுத்துக்கள் முதன்முதலில் அச்சில் வந்தன அதற்கு அடுத்த ஆண்டு மதுரை சேதுபதிப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் சுதேசமித்திரன் பத்திரிக்கையின் துணை ஆசிரியராக பொறுப்பேற்றார் 1905 ஆம் ஆண்டு சுதந்திர வேட்கைக் காரணமாக அரசியலில் பிரவேசிக்கத் தொடங்கினார் பாரதி.

கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சியுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது சகோதரி நிவேதிதாவை சந்தித்தப் பாரதி அவரையே தந்து ஞான குருவாக ஏற்றுக் கொண்டார் 1907 ஆண்டில் இந்தியா என்ற வார ஏட்டையும் பாலபாரதம் என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார். அப்போது பாரதியின் கவணம் இந்திய சுதந்திர போராட்டத்தின் பக்கம் திரும்பியது சுதந்திரத்தை வலியுறுத்தும் கட்டுரைகளையும் தலையங்கங்களையும் பிரசுரித்தார், வ.உ.சிக்கு விதிக்கப்பட்ட இரட்டை ஆயுள் தண்டனையை கடுமையாக கண்டித்து கட்டுரைகள் எழுதினார்.

பிரிட்டிஷ் ஆட்சியாளரின் கவணம் பாரதி பக்கம் திரும்பியது பாரதியை கைது செய்ய முனைந்தனர் அதனையறிந்த பாரதி தன் நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் ஃப்ரெஞ்சு நாட்டின் ஆதிக்கத்தின் கீழிருந்த பாண்டிச்சேரியில் சிலகாலம் தலைமறைவாக வாழ்ந்தார்.

அவ்வாறு வாழ்ந்தபோதுதான் கண்ணன் பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலிசபதம், போன்ற புகழ்பெற்ற அமரக் கவிதைக் கவிதைகளை எழுதினார். 

அதோடு 1912 ஆம் ஆண்டு பகவத் கீதையை தமிழில் மொழிப் பெயர்த்து வெளியிட்டார் பாரதி பாண்டிச்சேரியில் இருந்தவாறே அவர் இந்தியா பத்திரிக்கையின் மூலம் தொடர்ந்து சுதந்திர வேட்கையைத் தூண்டிவிடும் கட்டுரையை எழுதினார்.

பாரதியின் குரலுக்கு தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு


பெருகுவதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி இந்தியா பத்திரிக்கைக்கு தடை விதித்தது 1918 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து வெளியேரிய பாரதி தமிழ்நாட்டு எல்லையில் பிரிட்டிஷ் போலீசாரால் கைது செய்யப் பட்டு 34 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு பிறகு விடுவிக்கப்பட்டார்.

விடுதலையானதும் கடையம் எனும் ஊரில் குடியேரினார் பாரதி அங்கு வறுமையில் வாடிய அவர் தனது சிரமத்தை விவரித்து எட்டயபுர மன்னருக்கு கடிதம் எழுதினார் ஆனால் பாரதிக்கு எந்த உதவியும் கிடைக்க வில்லை.

பாரதியின் மனைவி செல்லம்மாள் வீட்டின் வறுமை தெரியாமல் கணவரைப் பராமரித்தார் அத்தகைய மனைவி வாய்த்ததால்தான் குடும்ப கவலையே இல்லாமல் தமிழ்ப்பணியிலும் பொதுவாழ்விலும் ஈடுபட முடிந்தது. பாரதியால் வறுமையில் கூட பாரதியிடம் தன்மானமும் செருக்கும் இருந்தது பொதுவாக கொடுக்குற கை மேலேயும் வாங்குகிற கை கீழேயும் இருக்கும் ஆனால் அந்த இலக்கணத்தையும் மாற்றினார் பாரதி ஒருமுறை அவரின் பணக்கார நண்பர் தட்டில் பணமும் பட்டாடையும் வைத்து பாரதியிடம் நீட்டினார் “தட்டை உமது கையிலேயே வைத்திரும்” என்று கம்பீரமாய் சொன்னபடி தமது கைகளால் அவற்றை எடுத்துக்கொண்டாராம் பாரதி.

கவிராஜன் என்பதால் அத்தனை மிடுக்கு என்று கூறுகிறது ஒரு குறிப்பு மனிதர்களுக்கு மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் வயிறு நிறைய வேண்டும் என விரும்பியவர் பாரதி அதனால் வீட்டில் செல்லம்மாள் வைத்திருந்த கொஞ்சம் அரிசியையும் காகங்களுக்கு வாரி இறைத்து விட்டு மதியம் உண்ண உணவு இல்லாமல் அவர் பசியோடு இருந்த நாட்களும் உண்டு. “காக்கைக் குருவி எங்கள் ஜாதி” என்று பாடியவராயிற்றே அவர் ஒருசமயம் நண்பர் ஒருவர் தமக்கு அளித்த பட்டாடையை வழியில் மேலாடையின்றி அவதிப்பட்ட ஓர் ஏழைக்கு போர்த்தி மகிழ்ந்தார் பாரதி.

இப்படி தாம் வறுமையில் வாடியபோது கூட மற்றவர்களுக்கு வாரி வழங்கினார் அந்த மகாகவி ஆனால் அவரது வாழ்க்கையில் வறுமையைத் தந்த இயற்கை அவரது ஆயுளிலும் தாராளம் காட்ட மறுத்துவிட்டது. 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தான் வழக்கமாக செல்லும் திருவல்லிக்கேனி பார்த்தசாரதி கோவிலுக்கு சென்றார் பாரதி எதிர்பாராவிதமாக அந்த கோவில் யானை அவரை தூக்கி எறிந்தது அதனால் பலத்த காயமுற்று நோய்வாய்ப் பட்டார். சிறிது நாட்களில் வயிற்றுக் கடுப்பு நோயால் அவதியுற்று அதே ஆண்டு செப்டம்பர் 11 ந்தேதி தனது 39 ஆவது வயதில் காலமானார்பாரதி.

இளம் வயதிலேயே அவர் மாண்டது அவலம் என்றால் அதை விட இன்னும் ஒரு சோகமான நிகழ்வை கவிராஜன் கதை’ என்ற தனது நூலில் குறிப்பிடுகின்றார் கவிஞர் வைரமுத்து. பாரதியின் இறுதி ஊர்வலத்தில் மிகச் சிலரே கலந்துகொண்டனர் அதனைப் குறிப்பிடும்போது:

இறுதி ஊர்வலத்தின் எண்ணிக்கை இருபதுக்கும் குறைவாக இருந்ததாம் தோழர்களே, மகா கவிஞனுக்கு மரியாதை பார்த்தீரோ அவன உடம்பில் மொய்த்த ஈக்களின் எண்ணிக்கையில் கூட ஆட்கள் இல்லையே!

தமிழ் பாரதிக்கு கிடைத்த வரம் பாரதி தமிழுக்கு கிடைத்த வரம். பாரதி குழந்தைகளுக்காக பாடினார் பெண்களின் முன்னேற்றத்திற்காக் பாடினார் அறியாமை நீங்கவும் ஜாதி வெறியை சாடவும் நாடு விடுதலைப் பெறவும் பாடினார். அந்தத் தீர்க்கத்தரிசியின் பல கனவுகள் பலித்தன அவர் இன்னும் அதிகம் காலம் வாழ்ந்திருந்தால் தமிழ் இன்னும் வளம் பெற்றிருக்கும் தமிழனும் வளம் பெற்றிருப்பான் மனித நேயமும் பெண் முன்னேற்றமும் ஜாதி ஒழிப்பும் சமத்துவமும் வறுமை ஒழிப்பும்தான் பாரதியின் வாழ்க்கைக் கனவுகளாயின அந்தக் கனவுகள் மெய்ப்படும் என்ற தன்னம்பிக்கையை அவர் எப்போதுமே இழந்ததில்லை.

நமக்கும்கூட அந்த விதி பொருந்தும் நாம் விரும்பும் இலக்கை நோக்கி தன்னம்பிக்கையோடு பயணித்தால் நாம் விரும்பும் வானம் நமக்கும் வசப்படும் என்பதுதான் பாரதியின் 39 ஆண்டுகால வாழ்க்கை நமக்கு சொல்லும் முக்கிய பாடம்..!

இவன் தமிழன்என்பதில் நாம் பெருமை கொள்வோம்

தமிழன் வருவான்

ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்?


ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்?

சமீபத்தில் சிக்கன் பிரியாணியுடன் வேர்க்கடலையும் சேர்த்துச் சாப்பிட்ட சிறுவன் இறந்து போன செய்தியைப் படித்தேன். ஃபுட் பாய்சன் ஏற்பட என்ன காரணம்? எந்த காம்பினேஷன் உணவுகளைச் சாப்பிட்டால் ஃபுட் பாய்சன் ஏற்படும்?

பதில் சொல்கிறார் டயட்டீஷியன் புவனேஸ்வரி
இந்த உணவுகளைச் சாப்பிட்டதால்தான் ஃபுட் பாய்சன் ஏற்பட்டது என்பது தவறான தகவல். சாப்பிட்ட உணவில் என்ன பிரச்னை என்றுதான் பார்க்க வேண்டும். 

வேர்க்கடலையோ, பிரியாணியில் இருந்த சிக்கன் பீஸோ கெட்டுப் போயிருக்கலாம். இரண்டையும் சேர்த்துச் சாப்பிட்டதால்தான் இறந்து போனான் என்ற தகவலில் உண்மையில்லை. இன்றைக்கு ஃபுட் பாய்சன் அதிகம் நடக்கிறது.

புரதம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் கெட்டுப்போகும் தன்மை கொண்டவை. வேர்க்கடலை, பால், அசைவ உணவு வகைகள், எண்ணெய் எல்லாம் சீக்கிரமே கெட்டுப் போகும். 

எண்ணெயில் பொரித்த உணவுகளை சேர்த்து வைத்து சாப்பிட்டால் ஆபத்தும் சேர்ந்து வரும். மழை, பனிக்காலத்தில் உணவுகள் கெட்டுப் போகக் காரணமாக இருப்பவை பூஞ்சைகள். அரிசி, பருப்பு போன்ற கிச்சனுக்குள் இருக்கும் பொருட்களுக்குள் வந்து உட்கார்ந்து கொள்ளும் 

இந்தப் பூஞ்சைகள் பொருளையும் கெடுத்து, நோய்களையும் கொடுத்துவிட்டுப் போகும்.
மளிகைப் பொருட்களில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. ஃப்ரிட்ஜுக்குள்தானே இருக்கிறது என்கிற நினைப்பு வேண்டாம். 

ஃப்ரிட்ஜில் ஒரு பொருளில் இருக்கும் பூஞ்சை மற்ற உணவுப் பொருட்களுக்கும் பரவிவிடும். கிச்சன் பொருள்களில் பூச்சிகள், பூஞ்சைகள் இருப்பது தெரிந்தால் அதை வெயிலில் உலர்த்தி மறுபடியும் பயன்படுத்துவார்கள். 

வெயிலில் காய வைப்பதால் பூஞ்சைகள் மறைந்துவிடாது.
அவற்றை உடனடியாக கொட்டிவிடுவது நல்லது. எக்ஸ்பயரி ஆன பொருள்களைப் பயன்படுத்தினாலும் ஃபுட் பாய்சன் ஏற்படும். 

சிப்ஸ் வகைகளை வாங்கும்போது கவனமாக இருங்கள். எண்ணெயில் இருந்து கெட்டுப்போன வாசனை வந்தால் அதைச் சாப்பிடுவது ஆபத்து. கெட்டுப்போன பழங்களுக்கும் இதே கதிதான். காய்கறிகள், பழங்களை ஃப்ரெஷ்ஷாக வாங்கி பயன்படுத்த வேண்டும்.

ஃப்ரிட்ஜில் உணவுகளை அடைத்து வைக்காமல், கொஞ்சமாக சமைத்துச் சாப்பிடப் பழகுங்கள். பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு முடிந்தவரை ஸ்நாக்ஸை நீங்களே தயாரித்து அனுப்புங்கள். 

கடையில் வாங்கிச் சாப்பிடுவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். 

மீன் சாப்பிட்ட பிறகு தயிர் சாப்பிடக் கூடாது, 
சிக்கன் சாப்பிட்டதும் பால் சாப்பிடக் கூடாது போன்ற கட்டுக்கதைகளைத் தூக்கி ஓரமாக வைத்து விட்டு, ரிலாக்ஸ் ஆகுங்கள்.


Friday, January 23, 2015

உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ?


உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ? ஆம் உலகிலேயே மிகப்பெரிய வழிப்பாட்டு தளம் “கம்போடியா” நாட்டில் நம் கலைத்திறமையை உலகிற்கே காட்டிய “அங்கோர் வாட்” கோயில்.

இரண்டாம் “சூர்யவர்மன்” இந்த இடத்தை கைப்பற்றியவுடன் இந்த பிரம்மாண்ட கோயிலை இங்கு கட்டினான். இந்த இடம் தான் அவனின் தலை நகரமாக செயப்பட்டது. ஒரு பெருமையான விஷயம் சொல்லாட்டுமா?, வைணவத் தளமான இந்த கோயிலானது தான் இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத்தலங்களிலேயே பெரியது!!

இந்த கோயிலை ஒரு கலை பொக்கிஷம் என்றே கூறலாம், திரும்பிய திசை எல்லாம் சிற்பங்களை வடித்துள்ளனர். இந்த கோயிலின் ஒரு பக்க சுற்று சுவரே 3.6 கிலோமீட்டர்கள் !!! அப்படி என்றால் இந்த கோயில் எவ்வளவு பிரம்மாண்டமாக கட்டபட்டிருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.( மீண்டும் ஒரு முறை ), இதன் சுற்றி சுவர் மட்டுமே 3.6 கிலோமீட்டர்கள் !!!

இந்த கோயிலின் ஆரம்பக்கட்ட வடிவமைக்கும் பணிகளானது பனிரெண்டாம் நூற்றாண்டின் முதலாம் பாதியில் தொடங்கியது. இருபத்தி ஏழு வருடங்கள் இந்த இடத்தை ஆண்ட “சூர்யவர்மன்” இறக்கும் சில ஆண்டுகள் முன்பு இதன் வேலைகள் நிறைவடைந்தது .இதன் பின்னர் ஆறாம் “ஜெயவர்மன்” கைக்கு மாறியது .பின்னர் இந்த கோயில் கொஞ்சம் கொஞ்சமாக “புத்த” வழிபாடு தளமாக மாற்றப்பட்டு. இன்று வரை இது புத்த வழிபாட்டுதளமாகவே செயல் பட்டு வருகின்றது!.

பதினாறாம் நூறாண்டிற்கு பிறகு இந்த கட்டிடம் சிறிது சிறிதாக புறக்கணிக்கப்பட்டது , அடர்ந்த காட்டுக்குள் இது கட்டப்படதனால் இது யார் கண்ணிற்கும் படாமல் சிதலமடயத்தொடங்கியது.பின்னர் 1586 ஆம் ஆண்டு “António da Madalena” என்ற போர்சுகீசிய துறவியின் கண்ணில் பட்டது, அதை அவர் “is of such extraordinary construction that it is not possible to describe it with a pen, particularly since it is like no other building in the world. It has towers and decoration and all the refinements which the human genius can conceive of.” என்று கூறியுள்ளார்.

பின்னர் Henri Mouhot என்ற பிரெஞ்சு எழுத்தாளர் தன் புத்கத்தில் இந்த கோயிலின் சிறப்பை வெயிட்டவுடன் தான் இதன் புகழ் உலகம் முழுக்கும் பரவத்தொடங்கியது. அவர் அந்த புத்தகத்தில் One of these temples—a rival to that of Solomon, and erected by some ancient Michelangelo—might take an honourable place beside our most beautiful buildings. It is grander than anything left to us by Greece or Rome, and presents a sad contrast to the state of barbarism in which the nation is now plunged என்று குறிப்பிட்டுள்ளார்!! பின்னர் இங்கு ஆய்வு பணிகளை மேற்கொண்ட பிறகு தான் இது நாம் கட்டியது என்று தெரியவந்தது!!

இன்றைக்கு இருக்ககூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட, இப்போதைக்கு இது போன்ற ஒரு கட்டிடம் கட்ட 300 ஆண்டுகள் ஆகும் என ஒரு பொறியாளர் கூறி உள்ளார்.ஆனால் எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் வெறும் 40 ஆண்டுகளில் இது கட்டிமுடிக்கப்பட்டுள்ளது இதில் இன்னொரு சிறப்பு “கம்போடிய நாட்டு தேசியக்கொடியில் நம் தமிழர்கள் கட்டிய இந்த கோயில் தான் “தேசிய சின்னமாக”ஆட்சிப் பொறுப்பு பொறிக்கப்பட்டுள்ளது!.

இதை பற்றி எழுத சொன்னால் இந்த நாள் முழுவதும் இதன் சிறப்புகளை வரிசை படுத்திக்கொண்டே இருக்கலாம், கடைசியாக ஒன்று இந்த 2015வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு கேமராவில் கூட இன்று வரை இதன் முழு கட்டிடத்தையும் படம் பிடிக்க முடியவில்லை!! வானத்தில் 1000 அடிக்கு மேல் விமானத்த்ல் இருந்து எடுத்தால் மட்டுமே இதன் முழு கட்டிடமும் பதிவாகின்றது!! இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த இடத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும் என்பது தெரியவில்லை! குறிப்பாக இது நம் தமிழ் மன்னன் கட்டினான் என்பது எத்தனை தமிழர்களுக்கு தெரியும் என்பதும் கேள்விக்குறியே!!

இன்றும் தாய்லாந்தில் மன்னர், ஆட்சிப் பொறுப்பு ஏற்பதற்கு முன் நமது திருப்பாவையை தாம் பாராயணம் செய்து பின்னர் பதவி ஏற்பதுதான் வழக்கத்தில் உள்ளது.