Friday, January 23, 2015

நம்ம மொழி செம்மொழி.

நம்ம மொழி செம்மொழி.
# அம்மா மூன்றெழுத்து
# அப்பா மூன்றெழுத்து 
# தம்பி மூன்றெழுத்து 
# அக்கா மூன்றெழுத்து 
# தங்கை மூன்றெழுத்து 
# மகன் மூன்றெழுத்து 
# மகள் மூன்றெழுத்து 
# காதலி மூன்றெழுத்து 
# மனைவி மூன்றெழுத்து 
# தாத்தா மூன்றெழுத்து 
# பாட்டி மூன்றெழுத்து
இவையனைத்தும் அடங்கிய 
# உறவு ' மூன்றெழுத்து 
உறவில் மேம்படும் # பாசம் மூன்றெழுத்து 
பாசத்தில் விளையும் # அன்பு மூன்றெழுத்து 
அன்பில் வழியும் # காதல் மூன்றெழுத்து 
காதலில் வரும் # வெற்றி மூன்றெழுத்து
# தோல்வி யும் மூன்றெழுத்து
காதல் தரும் வலியால்வரும் # வேதனை மூன்றெழுத்து 
வேதனையின் உச்சகட்டத்தால் வரும் # சாதல் மூன்றெழுத்து 
சாதலில் பறிபோகும் # உயிர் மூன்றெழுத்து.
இது நான் எழுதிய # கவிதை என்றமூன்றெழுத்து
இது # அருமை என்றால் அதுவும் மூன்றெழுத்து 
# மொக்கை என்றால் அதுவும் மூன்றெழுத்தே 
# நட்பு என்ற மூன்றெழுத்தால் இணைந்து இதைப்படித்த அனைவருக்கும் என் நன்றி 
# நன்றி யும் மூன்றெழுத்தே ...!
# மூன்றும் மூன்றெழுத்தே........!!!
" நம் தமிழும் மூன்றெழுத்தே ".

Thursday, January 22, 2015

நான் தமிழன் திமிரானவன்

"ஐரோப்பிய இரயிலில் 'பயணம் நல்லதாகட்டும்'
என்று தமிழில் எழுதியுள்ளனர்"

தமிழ் மொழியை தவிர வேறு எந்த இந்திய
மொழியும் அதில் இடம்பெறவில்லை!

ஆனால் தமிழை வட்டார மொழி என இன்னும் உளறிக் கொண்டு இருக்கின்றனர் இந்திய ஆட்சியாளர்கள்.

823 ஆண்டுக்கு- ஒரு முறை நடக்கும் அதிசயம்

823 ஆண்டுக்கு- ஒரு முறை நடக்கும் அதிசயம்

2015-ல் பிப்ரவரியில்

4-ஞாயிறு

4-திங்கள்

4-செவ்வாய்

4-புதன்

4-வியாழன்

4-வெள்ளி

4-சனி

ராமரின் விமானமோ



வால்மீகி ராமாயணத்தில், யுத்த காண்டத்தில், ஸ்ரீராமரின் விமானம் பற்றிய ஒரு தகவல் வருகிறது. இதுவரை புரியாதிருந்த இவ்விஷயம் இப்போது வெளியான அறிவியல் செய்தியால் நன்கு விளங்குகிறது. பாரத்வாஜ மஹரிஷி சம்ஸ்கிருதத்தில் எழுதிய வைமானிக சாஸ்திரம் ‘’விமானம் செய்வது எப்படி?’’ என்று கூறுகிறது. ஆனால் அவை எல்லாம் காற்றடைத்த பலூன் விமானங்களைப் போன்றவை. ராமரின் விமானமோ அதி நவீன விமானம். நினைத்த மாத்திரத்தில் பறக்கும், இறங்கும். இதை அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இப்போது செய்து காட்டியுள்ளனர்.

ராவணனை வதம் செய்த ராம பிரான் உடனே அயோத்தி திரும்ப வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார். ஆனால் விபீஷணனோ கொஞ்சம் குளித்துவிட்டுப் போகலாமே. இதோ பாருங்கள் நறுமணப் பொருட்கள்; அதை உடலில் தேய்த்துவிட அழகான நங்கைகள் என்று கூறுகிறான். அப்படிபட்ட ஆடம்பர வேலைகளுக்கு நேரமில்லை என்று ராமன் கூறவே விபீஷணன் கூறுகிறான் (வால்மீகி ராமாயணம், யுத்த காண்டம், அத்தியாயம் 123)

“ஓ, ராஜனே, கவலைப்படாதீர்கள். குபேரனிடம் இருந்த புஷ்பக விமானத்தை என் அண்ணன் ராவணன் வலுக் கட்டாயமாக பறித்து வந்தான்; அது ஒரே நாளில் உங்களை அயோத்தியில் சேர்த்துவிடும். அது வெள்ளை நிற மேகம் போல வண்ணமுடையது. சூரிய வெளிச்சத்தில் தக தக என்று மின்னும். பாதுகாப்பாகச் செல்லாலாம்; நினைத்த மாத்திரத்தில் பறக்க வல்லது”

விபீஷணனின் கூற்றில் நான்கு முக்கிய விஷயங்கள் உள்ளன: 1.நினைத்த மாத்திரத்தில் பறக்கும், அதாவது எண்ண அலைகளால் பறக்க வல்லது, 2.வெள்ளி போல, அலுமினியம் போல, வெள்ளை மேகம் போல, நிறம் உடையது 3.பயப்படவேண்டாம், பாதுகாப்பானது 4.ஒரே நாளில் அயோத்திக்குப் போகும் அளவு வேகமானது!!





இந்த 4 விஷயங்களும் இக்காலத்திலும் பொருந்தக் கூடியவை: வெள்ளி போல நிறம் மற்றும் பாதுகாப்பு; நாங்கள் லண்டனில் ஏறி சென்னை வரும் போதெல்லாம் விமானம் புறப்படுவதற்கு முன் முதலில் பாதுகாப்பு அறிவிப்பும் ‘’டெமான்ஸ்ட்ரேஷனும்’’ வரும். அந்தக் காலத்தில் விபீஷணன் சொன்ன பாதுகாப்பு விஷயம் இன்று வரை நடை முறையில் உள்ளது!

புதிய கண்டு பிடிப்பு!

ஸ்ரீ ராமர் விமானம் எப்படிப் பறந்தது? தற்கால விமானம் போல உயர் ரக பெட்ரோல் ஊற்றினாரா? அல்லது ஹைட்ரஜன் வாயுவால் பறந்ததா? என்று எல்லாம் கேட்போருக்கு இப்போது விடை கிடைத்துவிட்டது. லண்டன் ‘மெட்ரோ’ பத்திரிகையில் எண்ண அலைகளால் பறந்த ஹெலிகாப்டர் பற்றிய செய்தி ஜூன் 5ஆம் தேதி (05/06/2013) வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவில் மின்னசோட்டா பல்கலைக் கழக அறிவியல், பொறியியல் துறை செய்த ஆராய்ச்சியை ‘’ஜர்னல் ஆF ந்யூரல் எஞ்சினீரிங்’’ சஞ்சிகை வெளியிட்டுள்ளது.
கல்லூரி வளாகத்தில் ஒரு மாடல் (மாதிரி) ஹெலிகாப்டர் செய்தனர். இதைப் பறக்கவைக்க சில ஆய்வாளர்கள் தங்கள் தலைகளில் ‘’எலெக்ட்ரோட்ஸ்’’களைப் பொருத்திக் கொண்டனர். நாம் பொம்மை விமானத்தைப் பறக்கச் செய்யும் ‘’ரிமோட் கண்ட்ரோல்’’ கருவிகள் எதையும் பயன்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக ‘’விமானமே பற, விமானமே இறங்கு, வலது பக்கம் போ, இடது பக்கம் போ’’ என்று மனதில் நினைத்தனர். மூளையில் இருந்து கிளம்பிய எண்ண அலைகள், எலெக்ட்ரோட்ஸ் மூலம் விமாத்துக்குச் செல்ல அதில் இருந்த கருவிகள் விமானத்தைப் பறக்க வைத்தன.

இதே தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் ரோபோ எனப்படும் இயந்திர மனிதர்களை இயக்கமுடியும். விபத்துக்களில் சிக்கியோரை மீட்க இது உதவும். இன்னும் எவ்வளவோ அற்புதங்களைச் செய்ய முடியும்.

ராம பிரானின் விமானம் இலங்கையின் ஏதோ ஒருபகுதியில் இருந்த இலங்காபுரி நகரில் இருந்து 3000 மைல்கள் பறந்து அயோத்திக்குப் போக ஒரே நாள்ததன் ஆனது! மேலும் 3000 ஆண்டுகளுக்கு முன் விமானங்கள் பகல் நேரத்தில் மட்டுமே பறந்திருக்கும். ஆக, 12 மணி நேரத்துக்குள் 3000 மைல் பறந்தார் ராமர்! இப்பொழுதைய விமானங்கள் சராசரியாக மணிக்கு 500 முதல் 600 மைல்கள் செல்லுகின்றன.

ராமபிரான் விமானத்தில் கருவிகள் இருந்தனவா? அவை என்ன? என்பதை நாம் அறியோம். ஆனால் எண்ணத்தினால், நினைத்த மாத்திரத்தில் விமானங்களைப் பறக்கவைக்கமுடியும் என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது. 

ஒருவேளை சில “பகுத்தறிவுகள்” இதை நம்ப மறுத்தாலும் இன்னும் பல விஞ்ஞான செய்திகள் வரும் வரை பொருத்திருக்கலாம். அதுவரை சிறந்த விஞ்ஞான புனைக் கதை எழுதிய பரிசையாவது வால்மீகி முனிவருக்கு அளிக்கலாம்.

உலகில் முதல் முதலில் நினைத்தமாத்திரத்தில் பறக்கும் ஏரோ பிளேன் பற்றி 2500 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிவிட்டாரே!

Wednesday, January 21, 2015

தாம்பிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது. ஏன்?








தாம்பிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது. ஏன்?

தாம்பிரம் என்னும் செம்பு, பஞ்ச பூதத்திலே ஒன்றான தீக்கூறு உலோகமாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் கண் தீக்கூறாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

தாம்பிர பாத்திரத்தில் ஊறிய நீரில் கண்கள் கழுவி வரும் பழக்கம் சங்ககால முதல் தமிழகத்தில் வழக்கில் உள்ளது. சித்த மருத்துவத்தில் கண் நோய்களுக்கு செய்யப்படும் 

அனைத்து மருந்து வகைகளில் செம்பு ஒரு பொருளாக சேர்க்கப்படுவதும், பழக்கிராம்பு பக்குவ எண்ணெய் போன்ற கண் மருந்துகளும்,செப்பு பாத்திரத்தில் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதும் உண்மை.

தாம்பிர பாத்திரத்தில் ஊறிய நீரில் கண்கள் கழுவி வரும் போது,கண் பகுதியில் கிருமிகள் அழிக்கப்பட்டு, கண்ணுக்கு பலனளிப்பதாக நவீன ஆராய்ச்சிகள் உரைக்கின்றன.

தமிழ் நாகரிகத்தின் உச்சங்கள்






தமிழ் நாகரிகத்தின் உச்சங்கள்
=============================
1. உலகின் முதன் முதலில் சித்திர எழுத்தைக் கண்டவன் தமிழன். அதிலிருந்து வட்ட எழுத்து, கோட்டு எழுத்து, நகர்ப்புற நகரி எழுத்து என்று பல்வேறு காலச்சூழலில் பல்வேறு எழுத்துகளைப் படைத்தவனும் தமிழன். படைத்ததோடு மட்டுமின்றி உலகெங்கும் அவற்றைப் பரப்பியவனும் தமிழன்.

2. சங்கங்கள் அமைத்து, மொழியை வளர்த்தவனும் தமிழன்தான். ஏறத்தாழ 10,000 ஆண்டுகளாய் இந்நிலை இருந்து வந்தது.

3. சாதி, சமயம் சிற்சில விதிவிலக்குகளைத் தவிர - சங்க இலக்கியங்களில் இல்லை, இல்லவே இல்லை. ஆனால் உரோமபுரி, கிரேக்கம், சீனம், எபிரேயம்(பிப்ரு) போன்ற எந்த மொழியின் தொடக்க கால இலக்கியங்கள் யாவும் சமயம் சார்பாகவும், மந்திர தந்திர வித்தைகளைக் கொண்டுள்ளதாகவும் இருக்கக் காண்கிறோம்.

4. தத்துவங்கள், வேதாந்தங்கள் யாவுமே தமிழனுக்கு மட்டும் சொந்தமாய் இருந்தன. தமிழன் இவற்றைக் காப்பாற்றாததால், பிறர் பிற எழுத்துகளில் பொதிந்து வைத்திருக்கின்றனர்.

5. அறநூல்களிலும் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கோட்பாட்டிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவன் தமிழன். திருக்குறளைக் காட்டிலும் வேறு என்ன வாழ்வியல் நூல் வேண்டும்?

6. 10,000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்துவெளி - ஹரப்பா நாகரிகங்களை உருவாக்கியவன் தமிழன். அதன் தொடர்ச்சியாக லோத்தல் முதல் ஆந்திர பொட்டி புரலுவரை கொண்டு சென்றவன் தமிழன். இம்மட்டோ? பத்தாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஈஸ்டர் தீவில் குடியேறி அங்கும் அவ்வெழுத்துகளைப் பொறித்தவன் தமிழன்.

7. பிற நாடுகளில் கற்கால நாகரிகமும் செம்பு நாகரிகமும் நிறைவேறாத காலத்திலேயே இரும்பை வடிக்கவும் வார்க்கவும், உருக்கு செய்யவும் கற்றுக் கொண்டவன் தமிழன். ரோமாபுரி வீதிகளிலும், கிரேக்க நாட்டுச் சிற்றூர்களிலும் தமிழன் வடித்த வேலும், வாளும், ஈட்டியுமே நிறைந்திருந்தன.

8. மருத்துவத் துறையிலும், அறுவை மருத்துவத்திலும் தமிழர்கள் தன்னிகரற்று விளங்கினர். மருத்துவ சேவைக்குச் சென்றனர். முன்னாளில் உலகப் பெரும் விஞ்ஞானியராகத் தமிழரே திகழ்ந்தனர். இயற்கை வளமும், மூலிகைத் தளமும் இதற்கு உதவின.

9. கல்வி கற்பதிலும், தமிழர்கள் திகழ்ந்தனர். சீனமொழி எழுத்தைத் திருத்தியவர்கள் தமிழர்கள். கொரிய மொழிக்கு தமிழை ஒட்டிய எழுத்து முறையைத் தந்தவர்கள் தமிழர்கள். சப்பான் மொழியையும் எழுத்தையும் செப்பம் செய்தவர்கள் தமிழர்கள்.

10. உலகில் அதிக அளவில் பருத்தி விளைவித்து ஆடையாக ஆக்கியவர்கள் தமிழர்கள். சாயமிடக் கற்றுக் கொண்டவர்களும் தமிழர்களே.

தமிழ் இலக்கியம்
=================
தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் மொழியில் மரபுரீதியாக 96 இலக்கிய நூல் வகைகள் உண்டு. இன்று தமிழ் மொழியில் பல புது இலக்கிய வகைகள் உருவாக்கப்பட்டு தமிழ் இலக்கியம் விரிந்து செல்கின்றது.

பண்டைக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்கள் என்றும் அழியாத தமிழ் இலக்கியங்களை இயற்றி பல நல்ல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். தமிழில் உள்ள இலக்கியங்களில் மிகவும் பழமையானவை சங்க இலக்கியங்கள் ஆகும்.

மு. வரதராசனின் தமிழ் இலக்கியம் என்னும் நூலில் தரப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய கால வகைப்பாடு பின்வருமாறு.

பழங்காலம்
சங்க இலக்கியம் (கிமு 300 - கிபி 300)
நீதி இலக்கியம் (கிபி 300 - கிபி 500)

இடைக்காலம்
பக்தி இலக்கியம் (கிபி 700 - கிபி 900)
காப்பிய இலக்கியம் (கிபி 900 கிபி 1200)
உரைநூல்கள் (கிபி 1200 - கிபி 1500)
புராண இலக்கியம் (கிபி 1500 - கிபி 1800)
புராணங்கள், தலபுராணங்கள்
இஸ்லாமிய தமிழ் இலக்கியம்

இக்காலம்
பத்தொன்பதாம் நூற்றாண்டு
கிறிஸ்தவ தமிழ் இலக்கியம்
புதினம்
இருபதாம் நூற்றாண்டு
கட்டுரை
சிறுகதை
புதுக்கவிதை
ஆராய்ச்சிக் கட்டுரை

நீட்டலளவு
===========
10 கோன் – 1 நுண்ணணு
10 நுண்ணணு – 1 அணு 
8 அணு – 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் – 1 துசும்பு
8 துசும்பு – 1 மயிர்நுணி
8 மயிர்நுணி – 1 நுண்மணல்
8 நுண்மணல் – 1 சிறுகடுகு
8 சிறுகடுகு – 1 எள்
8 எள் – 1 நெல்
8 நெல் – 1 விரல்
12 விரல் – 1 சாண்
2 சாண் – 1 முழம்
4 முழம் – 1 பாகம்
6000 பாகம் – 1 காதம்(1200 கெசம்)
4 காதம் – 1 யோசனை
-----------------------------------------
-நான்
தமிழன் திமிரானவன்.

Tuesday, January 20, 2015

நம்மூரில் சாமியார்கள் கைகளில் திருவோடு






நம்மூரில் சாமியார்கள் கைகளில் திருவோடு வைத்திருப்பதை பார்த்திருப் பீர்கள், 

அதில் அவர்கள் யாசகம் பெற்று உயிர் வாழ்வார்கள். 

இந்த திருவோடு ஒரு மரத்தின் விதை என்றால் நம்ப முடி கிறதா?

நம்பித்தான் ஆக வேண்டும். 

ஏனென்றால், அதுதான் உண்மை.

இந்த திருவோடு உலகத்திலேயே மிகப் பெரிய விதையான கடல் தேங்காயின் ஓடு. கடல் தேங்காய்க்கு நிறைய பெயர்கள் உண்டு. திருவோட்டுக்காய், இரட்டைத் தேங்காய், கடல் பனை, மாலத்தீவுத் தேங்காய் என்று. இதன் விதைகளை பாதியாக அறுத்து சுத்தம் செய்து திருவோடாக மாற்றுகிறார்கள்.

திருவோட்டுக்காய் பார்ப்பதற்கு பெரிய சைஸ் தேங்காய் போலவே இருக்கும். மரமோ பனை மரம் போல இருக்கும். இதன் பிறப்பிடம் ‘சிசெல்ஸ்‘ தீவுகள். இவை எல்லா இடங்களிலும் வளர்வது இல்லை. இந்தியப் பெருங்கடலில் பிரஸ்லின் என்ற தீவில்தான் அதிகமாக வளர்கிறது.

இதிலும் பனை மரத்தை போலவே ஆணும், பெண்ணும் உண்டு. ஆண் மரங்கள் 6 அடி நீளம் கொண்ட பூக்களை மலர்விக்கின்றன. பெண் மரங்கள் முளைக்கத் தொடங்கி 100 வருடங்கள் கழித்தே பூக்கத் தொடங்குகின்றன. பூ மலர்ந்து காயாக மாறி முற்றுவதற்கு 10 வருடங்கள் ஆகும்.

காய் பெரிய தேங்காய் மாதிரி இருக்கும். நார் அடர்த்தியாக இருக்கும். ஓட்டுக்குள் உள்ள கனிப் பகுதி முதலில் பனை நுங்கு போல் இருக்கும். முற்றிய பின் தேங்காய் போல சுவைக்கும். முற்றிய காய் உதிர்ந்து கடலில் மிதந்து கரையில் ஒதுங்கும். மாலத்தீவில் ஏகப்பட்ட காய்கள் கரை ஒதுங்குகின்றன. கடல் நீரோட்டத்தின் மூலமே விதை பரவுகிறது.

விதை முளைக்கத் தொடங்கி முதல் இலை தோன்றுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகின்றன. 90 அடி உயரம் வளர்கிறது. இதன் சுற்றளவு 12 அடி. இலைகள் விசிறி வடிவில் பனை இலை மாதிரியே இருக்கும். ஆனால், ஒரு இலை 21 அடி நீளமும், 12 அடி அகலமும் கொண்டதாக இருக்கும்.

இதன் விதை ஒன்றின் எடை 7 கிலோ முதல் 23 கிலோ வரை இருக்கும். இந்த விதை தானாக முளைத்தால்தான் உண்டு. 

தோட்டங்களில் முளைக்க வைக்க எவ்வளவோ முயன்றார்கள். ஒன்று கூட முளைக்க வில்லை. அப்படியே தப்பி தவறி முளைத்தாலும் வெகு சீக்கிரமே அழிந்துவிடும். 

திருவோடு இத்தனை சிறப்பு பெற்றது.