Wednesday, December 31, 2014

2015 New Year

Dear All, WELCOME TO THE NEW YEAR 2015....!!!!!!!! WISHING YOU AND YOUR FAMILY MEMBERS AND FRIENDS A VERY HAPPY- JOY FUL - BRIGHT – HEALTHY – PROSPEROUS GREAT NEW YEAR

மாதுளை பழ பாலக் சென்னா மசாலா/Palak Chana masala with Pomegranate

நார்மலாக செய்யும் பூரி சென்னாவில் மாதுளை முத்துகள் மற்றும் பாலக் சேர்த்துள்ளேன்.சிலநேரம் மாதுளை பழம் புளிப்பாக இருக்கும், அதை நாம் இப்படி சால்னா,கறிவகைகளுக்கு சேர்த்து செய்யலாம். திடீர் யோசனை தான் பாலக்கிலும் , வெஜிடேபுள் குருமாவிலும் மாதுளை சேர்த்து செய்தேன்.



தேவையான பொருட்கள்

வொயிட் சென்னா 200 கிராம்
பாலக் கீரை – ஒரு கப்
தக்காளி – 2
தயிர் – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 2
சோம்பு – ஒரு தேக்கரண்டி
மாதுளை பழம் – 3 தேக்கரண்டி
சென்னா மசாலா – 1 ½ தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி
பச்சமிளகாய் – 2
மிளகாய் தூள் – கால் தேக்கரண்டி
தனியாத்தூள் – அரை தேக்கரண்டி
கரம் மசாலாதூள் – கால் தேக்கரண்டி
சர்க்கரை – ஒரு சிட்டிக்கை
உப்பு தேவைக்கு
பட்டர் (அ) நெய் – ஒரு தேக்கரண்டி
எண்ணை – 2 + 1 தேக்கரண்டி
கொத்து மல்லி தழை – சிறிது

செய்முறை
பாலக்கீரையை கட் செய்து  மண்ணில்லாமல் அலசி தண்ணீரை வடித்து வைக்கவும்.
சென்னாவை இரவே ஊறவைத்து காலையில் குக்கரில் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேகவைத்து தண்ணீரை வடித்து வைக்கவும்.
ஒரு வானலியில் ஒரு ஸ்பூன் எண்ணைய காயவைத்து அதில் சோம்பு பச்சமிளகாய், வெங்காயம், தக்காளி, மாதுளை முத்துகள் ,பாலக்கீரை அனைத்தையும் சேர்த்து வதக்கி ஆறவைத்து மிக்சியில் அரைத்து வைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தை சூடுபடுத்தில் அதில் எண்ணை + பட்டர் சேர்த்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வதக்கி பிறகு அரைத்த விழுதை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
இப்போது மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாதூள்,சென்னா மசாலா, உப்பு அனைத்தும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்,
மசாலாவாடை அடங்கியதும் வெந்த சென்னாவை சேர்த்து , கரம்மசாலாதூள் மற்றும் சர்க்கரையும் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இரக்கவும்.
மேலே கொத்துமல்லி தழை தூவி பரிமாறவும். பூரிக்கு ஏற்ற சைட் டிஷ்.
ப்ரட் , பண்ணிலும் வைத்து சாப்பிட அருமையாக இருக்கும்.


பாலக் , மாதுளை , வெள்ளை கொண்டைக்கடலை கறி
பூரிக்கு பக்க உணவு.

பாரம்பரிய கேரளா மீன் கறி - Kerala Special Traditional Fish Curry

இது முக நூல் மற்றும் அறுசுவை தோழி தளிகாவின் பாரம்பரிய மீன் குழம்பு. இதில் குடம்புளி சேர்ப்பதும், தேங்காய் எண்ணை சேர்ப்பதும் தான் இந்த ரெசிபியின் சிறப்பே. புளிக்கு பதில் குடம்புளியை கேரள மக்கள் பயன் படுத்துவார்கள்.



தேவையான பொருட்கள்

மீன் - 1/2 கிலொ
தேங்காய் எண்ணை - 2 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
இஞ்சி துருவல் அல்லது இடித்தது - 1 ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 12 நறுக்கியது
பச்சை மிளகாய் - 2
தக்காளி - 1
குடம்புளி ஊறவைத்தது - 2
மிளகாய் தூள் - 1.5 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
தேங்காய் அல்லது தேங்காய் பால் - 1 - 1.5 கப் தேங்காய் அரைத்தது
உப்பு - தேவைக்கு
கறிவேப்பிலை - சிறிது





( மீனை கழுவும் போது மஞ்சள் தூள் , அல்லது வினிகர் சேர்த்து கழுவி தண்ணீரை வடித்து கொள்ளுங்கள்,




செய்முறை

முதலில் தேங்காய் எண்ணை காயவைத்து வெந்தயம் சேர்த்து சிவந்ததும் இஞ்சி சேர்த்து பிறகு வெங்காயம்,ப்ச்சை மிள்காய் சேர்த்து சிவக்க வறுத்து அதில் தக்காளி சேர்த்து மேலும் 3 நிமிடம் வதக்கி மஞ்சள்,மிளகாய் தூள் சேர்த்து 30 செகன்ட் வதக்கியதும் தேங்காய் அரைத்த விழுது சேர்த்து தேவைக்கு தண்ணீரும் உப்பும் சேர்த்து கொதி வந்ததும் மீனை சேர்க்கணும்..பிறகு மூடி போட்டு தீயை குறைத்து ஐந்தே நிமிடம் தான் கடைசியாக தீயை அணைத்து விட்டு கறிவேப்பிலை கொஞ்சம் அதிகமா சேர்க்கணும்.
இது சுலபமான ட்ரெடீஷனல் கேரளா குழம்பு.சுவை அருமையா இருக்கும்..காலை நேரமா செய்து வெச்சுட்டா மதியத்துக்குள் புளி இறங்கிடும் பின் புளியை தூக்கி போட்டுடலாம்.








பைசா செலவில்லாமல் ஆரோக்கியமாக வாழ சில வழிமுறைகள்:

நம் முன்னோர்கள் இயற்கை உணவை உண்டு நீண்ட ஆயுள்காலத்துடன் வாழ்ந்தார்கள், ஆனால் அவர்கள் வழிவந்த நாம் பாஸ்புட் உணவுகளையும், மருத்துவரையும் நாடி செல்கின்ற நிலமை ஏற்பட்டுள்ளது. நாம் இதை மாற்றி பைசா செலவில்லாமல் நீண்ட ஆயுளுடன் வாழ நம் முன்னோர்களின் இயற்கை வழிமுறைகள்:
அருகம்புல் சாறு: குடித்த இரண்டு மணிநேரம் கழித்து, இரண்டு வாழைப்பழங்களுடன் ஒருவேளை உணவை முடித்துக் கொள்ளலாம். அந்த அளவுக்கு இதில் அதிக சத்துகள் உள்ளன. எல்லா நோய்களுக்கும ஏற்ற டானிக் அருகம்புல் சாறு. ரத்தத்தை சுத்தம் செய்யும். நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். அமிலத்தன்மையை குறைக்கிறது. மலச்சிக்கலை நீக்குகிறது.
துளசி இலைச்சாறு: காய்ச்சல்,இருமல், ஜீரணக்கோளாறு, ஈரல் சம்பந்தமான நோய்கள், காது வலி ஆகியவற்றை நீக்கி, ரத்தத்தை சுத்தம் செய்கிறது.
தூதுவளை இலைச்சாறு: மார்ப்பு சளியை அகற்றும். நரம்புத்தளர்ச்சி மறையும். மூளை வளர்ச்சி, நினைவாற்றல் அதிகரிக்கும். தோல் நோய்கள் மறையும்.
மஞ்சள் கரிசலாங்கண்ணிச் சாறு: உடல் தங்க நிறமடையும். கண்கள் நல்ல பார்வை பெறும். மூளைக்கு நல்ல சுறுசுறுப்பை தரும்.தெளிவான அறிவு கிடைக்கும். காமாலையும், மலச்சிக்கலும் ஓடும்.
பொன்னாங்கண்ணிச் சாறு: உடலுக்கு வலு ஊட்டுவதோடு பொன்போல் பளபளக்கும் தன்மையை அளிக்கிறது. கண்ணொளி அதிகரிக்கும். வாதநோய்கள் மறையும். உடல் சூடு குறையும்.
வல்லாரை இலைச்சாறு: நினைவாற்றல் வளரும், நரம்புத்தளர்ச்சி அகலும், வயிற்று நோய்கள், குடல் நோய்கள் நீங்கும், தாது விருத்தியாகும். சிறுநீர் நன்கு பிரியும். இதயம் வலுவாகும்.
வில்வ இலைச்சாறு: காய்ச்சல், நீரழிவு குறையும். வயிற்றுப்புண்கள் ஆறும். நல்ல பசி எடுக்கும், மந்த புத்தி மாறும், மஞ்சள் காமாலை நீங்கும், காலாரா குறையும்.
முசுமுசுக்கை இலைச்சாறு: தொடர் இருமல், சளி, மூக்கில் நீர் ஒழுகுதல் குறையும். நுரையீரல் நோய்கள் மறையும்.
புதினா இலைச்சாறு: வாய்ப்புண், குடல்புண்கள், சளி, கபம், இருமல் குறையும். புற்றுநோய்கள், வெண்குஷ்டம் குறையும்.
நெல்லிக்காய் சாறு: தலைமுடி உதிர்வது குறையும். தும்மல்,இருமல்,சளி,கண்நோய்,பல்நோய்கள் குறையும். நன்கு பசிக்கும், இதயநோய்கள், நீரழிவு நோய்கள் குறையும்,உடல் பலமின்மை, தோல் நோய்கள் குறையும்.
வாழைத்தண்டுதண்டுச்சாறு: சிறுநீர் அடைப்பு,சிறுநீரக சம்பந்தமான நோய்கள் குறையும். ரத்த அழுத்தம், தொந்தி குறையும்.அமில்;அமிலத்தை குறையும், உடல்,கை,கால் வீக்கம் குறையும். பாம்புக்கடி, வண்டுக்கடி நச்சுக்கள் குறையும். ரத்தம் சுத்தமாகும்.
சாம்பல் பூசணிக்காய்சாறு: பெண்களுக்கு மாதவிடாய் நோய்கள், கர்ப்பப்பைநோய்கள், வயற்றுப்புண்கள் அமிலத்தைக் குறைக்கும்.
கேரட் சாறு: கண்பார்வை ஒளி பெறும். கண்நோய்கள், பல்நோய்கள் குறையும். அமிலத்தை குறைக்கும்.
அரச இலைச்சாறு: மலச்சிகல்,உடல் சூடு,கர்ப்பப்பை நோய்கள் குறையும்.
பூவரசு இலைச்சாறு: காலரா,தொழுநோய்,தோல் நோய்கள் குறையும்.

கொத்துமல்லிச்சாறு: பசியைதூண்டும், பித்தம் குறையும்,வாத நோய் குறையும், மூலம், காய்ச்சல், இருமல், சளி, வாதம் குறையும்.
-----------------------------------------------------------
spuǝıɹɟ 
oʇ ɹɐǝʎ ʍǝu ʎddɐɥ noʎ ɥsıʍ

Tuesday, December 30, 2014

பனீர் சென்னா புலாவ் ( குக்கர் முறை)

பனீர் சென்னா புலாவ் ( குக்கர் முறை) குழந்தைகளுக்கு லன்ச் பாக்ஸ் அல்லது பெரியவர்களுக்கு ஆபிஸ் எடுத்து போக இந்த பனீர் சென்னா புலாவை குக்கரில் எளிதாக செய்து விடலாம். குழந்தைகளும் விரும்பிசாப்பிடுவார்கள். லன்ச் பாக்ஸ் க்கு ஏற்ற ஈசி உணவு தேவையான பொருட்கள் பாஸ்மதி அரிசி – 300 கிராம் வேக வைத்த வொயிட் சென்னா ( கொண்டைக்கடலை) – 100 கிராம் அமுல் பனீர் – 100 கிராம் அரைக்க கொத்துமல்லி தழை புதினா சின்ன வெங்காயம் – 10 எண்ணிக்கை பச்ச மிளகாய் – 2 தயிர் – ஒரு மேசைகரண்டி தாளிக்க ஆயில் – 3 தேக்கரண்டி நெய் அல்லது பட்டர் – ஒரு தேக்கரண்டி பிரிஞ்சி இலை இஞ்சி பூண்டு விழுது – ஒன்னறை தேக்கரண்டி கரம் மசாலா – அரை தேக்கரண்டி சர்க்கரை – 1 சிட்டிக்கை வெண்ணீர் – 450 மில்லி உப்பு – சுவைக்கு தேவையான அளவு   செய்முறை அரிசியை களைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும். பன்னீரை வெண்ணீரில் கழுவி சிறிது மிளகாய் தூள் , உப்பு தூள் சேர்த்து பிசறி வைக்கவும். அரைக்க கொடுத்துள்ளவைகளை மிக்சியில் முக்கால் பதத்துக்கு அரைத்து வைக்கவும். குக்கரை அடுப்பில் ஏற்றி சூடுபடுத்தி ஒரு தேக்கரண்டி பட்டர் சேர்த்து பனீரை வறுத்து தனியாக ஒரு பவுளில் எடுத்து வைக்கவும். அதே குக்கரில் எண்ணைவிட்டு பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும். பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.அடுத்து அரைத்து வைத்துள்ளதை சேர்த்து நன்கு வதக்கி இரண்டு நிமிடம் மசாலா ஒரு சேர கிளறி வேகவைத்துள்ள சென்னா, பனீர், கரம் மசாலா, சர்க்கரை , மிளகாய் தூள் நன்கு கிளறி வெண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும். ஊற வைத்துள்ள அரிசியை தண்ணீர் வடித்து சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் குக்கரை மூடி தீயின் தனலை குறைவாக வைத்து 2 விசில் விட்டு இரக்கவும். ஆவி அடங்கியதும் குக்கரை திறந்து சாதம் உடையாமல் கிளறி இரக்கவும். லன்ச் பாக்ஸ் க்கு ஏற்ற ஈசி உணவு, நிமிஷத்தில் தயார் படுத்திவிடலாம். இதில் மசாலாக்கல் அரைத்து ஊற்றி செய்துள்ளதால் பிள்ளைகளுக்கு எளிதில் சாப்பிடதோதுவாக இருக்கும். பனீர் சென்னா சேர்த்துள்ளதால் இந்த சாதம் மிகவும் சத்துள்ளதாக இருக்கும்.

குதிரை வாலி பொங்கல் - Kuthirai Vaali Pongal

குதிரை வாலி பொங்கல் - Kuthirai Vaali Pongal குதிரை வாலி பொங்கல் மறந்து போன பழங்காலத்து சிறுதாணிய வகைகள் மீண்டும் இப்போது அனைவரும் பயன் படுத்த ஆரம்பித்து உள்ளனர். ரொம்ப நல்ல விஷியம், அரிசி உணவை தவிர்த்து , குதிரை வாலி, சாமை, வரகரிசி, தினை, கம்பு, கேழ்வரகு என்று பயன் படுத்தினால் சர்க்கரை வியாதி, கேன்சர் வியாதி, ஹார்ட் பிராப்ளம் போன்ற பல வியாதிகளில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம். இதில் நான் பயன் படுத்தி இருப்பது குதிரை வள்ளி ( வாலி) Kuthirai vaali என்ற தாணியம், அந்த அளவுக்கு அரிசிக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை மிகவும் நன்றாக இருந்தது. தேவையான பொருட்கள். குதிரை வாலி அரிசி - முக்கால் டம்ளர் சிறு பருப்பு - கால் டம்ளர் உப்பு - தேவைக்கு தாளிக்க எண்ணை + நெய் - 4 தேக்கரண்டி மிளகு - ஒரு தேக்கரண்டி சீரகம் - ஒரு தேக்கரண்டி பொடியாக அரிந்த பச்சமிளகாய் - ஒரு தேக்கரண்டி துருவிய இஞ்சி - அரை தேக்கரண்டி பொடியாக அரிந்து வறுத்த முந்திரி - ஒரு மேசைகரண்டி கருவேப்பிலை - 5, 6 இதழ் செய்முறை பாசி பருப்பு மற்றும் குதிரை வாலி அரிசியை களைந்து ஊறவைக்கவும். குக்கரில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். நன்கு கொதி வந்ததும் ஊறிய அரிசி மற்றும் பருப்பை சேர்த்து உப்பு சேர்த்து வேகவிடவும். முக்கால் பதம் வெந்ததும், தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து வெந்து கொண்டு இருக்கும் அரிசியில் சேர்த்து குக்கரை மூடவும். தீயின் தனலை மிதமாக வைக்கவும். முன்று விசில் விட்டு இரக்கவும். குக்கர் ஆவி அடங்கியதும், சிறிது நெய் விட்டு கிளறி இரக்கவும். இதில் இன்னும் இனிப்பு பொங்கல், அடை, கொழுக்கட்டை, ரொட்டி போன்றவை தயாரிக்கலாம். நோன்பு கஞ்சி செய்தவதில் அரிசிகூட இந்த குதிரை வாலியும் பாதிக்கு பாதி சேர்த்து செய்யலாம்.இல்லை கஞ்சியே இந்த தாணியத்தில் செய்யலாம். நான் செய்து பார்த்தேன் மிக அருமையாக இருந்தது. இதில் கிச்சிடி, முறுக்கு , சத்துமாவு, பாயசம் போன்றவை தயாரிக்கலாம். கவனிக்க: இந்த தாணியவகைகள் கிடைக்கும் இடம் சென்னையில் நீல்கிரீஸ் , ஒரு கிலோ 65 ரூபாய் என்று நினைக்கிறேன். ஆயத்த நேரம்: 10 நிமிடம் சமைக்கும் நேரம் : 10 நிமிடம் பரிமாறும் அளவு - 2 நபர்களுக்கு

‪‎வாழை இலை சாப்பாடு ஏன்?

‪#‎வாழைஇலையில்
நாம் சாப்பிடுவதால் என்ன என்ன பயன்கள் ஏற்படுகிறது !!
இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம்.
அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம்
முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும்.
அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.
தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும்.
இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.
காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான்.
ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.
இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு.
நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தப்படுத்துகிறோம்? தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம்.
ஆனால் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.
வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.