Wednesday, December 31, 2014

மாதுளை பழ பாலக் சென்னா மசாலா/Palak Chana masala with Pomegranate

நார்மலாக செய்யும் பூரி சென்னாவில் மாதுளை முத்துகள் மற்றும் பாலக் சேர்த்துள்ளேன்.சிலநேரம் மாதுளை பழம் புளிப்பாக இருக்கும், அதை நாம் இப்படி சால்னா,கறிவகைகளுக்கு சேர்த்து செய்யலாம். திடீர் யோசனை தான் பாலக்கிலும் , வெஜிடேபுள் குருமாவிலும் மாதுளை சேர்த்து செய்தேன்.



தேவையான பொருட்கள்

வொயிட் சென்னா 200 கிராம்
பாலக் கீரை – ஒரு கப்
தக்காளி – 2
தயிர் – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 2
சோம்பு – ஒரு தேக்கரண்டி
மாதுளை பழம் – 3 தேக்கரண்டி
சென்னா மசாலா – 1 ½ தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 தேக்கரண்டி
பச்சமிளகாய் – 2
மிளகாய் தூள் – கால் தேக்கரண்டி
தனியாத்தூள் – அரை தேக்கரண்டி
கரம் மசாலாதூள் – கால் தேக்கரண்டி
சர்க்கரை – ஒரு சிட்டிக்கை
உப்பு தேவைக்கு
பட்டர் (அ) நெய் – ஒரு தேக்கரண்டி
எண்ணை – 2 + 1 தேக்கரண்டி
கொத்து மல்லி தழை – சிறிது

செய்முறை
பாலக்கீரையை கட் செய்து  மண்ணில்லாமல் அலசி தண்ணீரை வடித்து வைக்கவும்.
சென்னாவை இரவே ஊறவைத்து காலையில் குக்கரில் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேகவைத்து தண்ணீரை வடித்து வைக்கவும்.
ஒரு வானலியில் ஒரு ஸ்பூன் எண்ணைய காயவைத்து அதில் சோம்பு பச்சமிளகாய், வெங்காயம், தக்காளி, மாதுளை முத்துகள் ,பாலக்கீரை அனைத்தையும் சேர்த்து வதக்கி ஆறவைத்து மிக்சியில் அரைத்து வைக்கவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தை சூடுபடுத்தில் அதில் எண்ணை + பட்டர் சேர்த்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வதக்கி பிறகு அரைத்த விழுதை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
இப்போது மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியாதூள்,சென்னா மசாலா, உப்பு அனைத்தும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்,
மசாலாவாடை அடங்கியதும் வெந்த சென்னாவை சேர்த்து , கரம்மசாலாதூள் மற்றும் சர்க்கரையும் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இரக்கவும்.
மேலே கொத்துமல்லி தழை தூவி பரிமாறவும். பூரிக்கு ஏற்ற சைட் டிஷ்.
ப்ரட் , பண்ணிலும் வைத்து சாப்பிட அருமையாக இருக்கும்.


பாலக் , மாதுளை , வெள்ளை கொண்டைக்கடலை கறி
பூரிக்கு பக்க உணவு.

No comments:

Post a Comment