Monday, December 29, 2014

ஈசி மட்டன் கப்ஸா

ஈசி மட்டன் கப்ஸா - Easy Mutton Kabsa

மட்டன் கப்ஸா

அரேபியர்களின் சாப்பாடு வகைகளில் கப்ஸா ரைஸ் மிகவும் பிரத்தி பெற்றது, இது காரம் இல்லாத அரபிக் பிரியாணி. கப்ஸா மசாலா பாக்கெட்டாக வே இங்கு கிடைக்கிறது.இதை மட்டன் கப்ஸா , சிக்கன்கப்ஸா , மீன் கப்ஸா, இறால் கப்ஸா , மஷ்ரூம் கப்ஸா. காய்கறி கப்ஸா போன்றவற்றுடன் சேர்த்து தயாரிக்கலாம்
How to Make Mutton kabsa Step by Step.

தேவையான பொருட்கள்

மட்டன் ( எலும்புடன்)) - அரைகிலோ
டோனார் லாங் கிரைன் ரைஸ் - அரை கிலோ
கப்சா மிக்ஸ் மசாலா ( நார் பிராண்ட்) Knor Kabsa mix - 1 Pkt - ஒரு பாக்கெட்
வெங்காயம் - இரண்டு நீளமாக நறுக்கியது
பட்டர் - 25 மில்லி
எண்ணை - 25 மில்லி

செய்முறை

அரிசியை களைந்து 20 நிமிடம் ஊறவைக்கவும்.
மட்டனை கழுவி தண்ணீரை வடிக்கவும்

குக்கரை அடுப்பில் ஏற்றி பட்டர் + எண்ணையை ஊற்றி காயவைத்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் மட்டனை சேர்த்து நன்கு கிளறவும்.
வெங்காயம் வதங்கியதும் கப்ஸாமசலாவை சேர்த்து கிளறி 5 நிமிடம் சிம்மில்( இப்ப எல்லாம் சிம்முன்னு சொன்னால் மொபல் சிம்மிலான்னு கேட்கிறாங்க ஆகையால் குறைந்த தீயில் வைத்து மசாலாக்கள் ஒன்று சேர்த்து கிரிப்பாகி மட்டன் சிறிது வெந்ததும்தண்ணீர் அளந்து ஊற்றவும்.

அரைகிலோ அரிசி என்பது இரண்டரை டம்ளர் , அதற்கு 1: 1 1/2 வீதம் தண்ணீர் அளந்து ஊற்றவும். முனேமுக்கால் டம்ளர் தண்ணீர் வருகிறது ஊற்றி கொதிக்க விடவும். கூட அரை டம்ளர் சேர்த்தே ஊற்றிகொள்ளலாம்.
குக்கரை மூடி மட்டனை வேகவிடவும்.

வெந்ததும் மட்டனை தனியாக எடுத்து வைத்து விட்டு, தேவைக்கு சூப் சிறிது அதில் இருந்து எடுத்து வைத்துகொள்ளவும்.
அந்த மட்டன் சூப் தண்ணீரை கொதிக்கவிட்டு  ஊறிய அரிசியை தண்ணீரை வடித்து இதில் தட்டவும்.

முக்கால் பதம் வெந்து கொதி வரும் போது  தனியாக எடுத்து வைத்துள்ள மட்டனை சேர்த்து குக்கரை மூடி வெயிட்டை போட்டு இரண்டு விசில் வந்ததும்முன்றாவது விசிலில் அடுபை அனைக்கவும்.

குக்கர் ஆவி அடங்கியதும் வெயிட்டை எடுத்து விட்டு கப்ஸாவை மெதுவாக சாதம் உடையாமல் பிரட்டி விட்டு எடுத்து பவுளில் வைக்கவும்.

இது அரேபியர்கள் தினப்படி செய்யும் உணவு வகை, அதிக மசாலா இல்லாமல் காரமும் கம்மியாக இருக்கும்.

இதற்கு தொட்டு கொள்ள
அரபிக் தாளி சாப்பாடு
மட்டன் கப்ஸா - Mutton Kabsa
சாலட் வகைகள்,  - Salad
பேரித்தம் பழம்,  - Dates
டெமேட்டோ சல்சா, - Tomato Salsa
ஃபுரூட் தயிர் - Fruit Curd
.கேரமல் கஸ்டட். - Caramel Custurd
மட்டன் சூப் - Mutton Soup
மட்டன் சூப் இதை மட்டன் வேகவைக்கும் போதே கொஞ்சம் அதிகமாக தண்ணீர் ஊற்றி அந்த சூப்பை எடுத்து கொள்ளலாம்.

அரபிக் தாளி சாப்பாடு.

No comments:

Post a Comment