Sunday, December 14, 2014

அபிராமி பட்டரும் விண்வெளிஅதிசயமும்

அபிராமி பட்டரும் விண்வெளிஅதிசயமும்
முன்னொருகாலத்தில் தஞ்சாவூரில்- திருக்கடையூர் என்ற கோவில்இருந்தது.அங்கு அபிராமி பட்டர் என்பவர் அந்தக்கோவிலில் உதவியாளராக இருந்தார்.அவருக்கு அந்த கோவில் தெய்வமான அபிராமிஅம்மன் மீது அளவற்ற பக்தி.
ஒரு நாள். . .அப்பகுதியை ஆண்ட மன்னன்அந்தக்கோவிலுக்கு வந்தான்.அன்று அமாவாசை.அந்த மன்னன் யதார்த்தமாக அபிராமிபட்டரிடம் இன்று என்ன தேதி(திதி)? என்று கேட்டான்.அவர் எப்போதும் அன்னைஅபிராமியம்மன் நினைவாகவே இருந்ததால் அன்று அமாவாசை என்பதை மறந்து பவுர்ணமிஎனக்கூறிவிட்டார்.
மன்னன் தன்னுடன் வந்த காவலர்களிடம் இன்று இரவு முழுநிலவுவந்தால் நீங்கள் அரண்மனைக்கு வந்துவிடுங்கள்.அப்படி முழுநிலவு வராவிட்டால் இவரைசிரச்சேதம்(தலையை வெட்டிவிடுதல்) செய்துவிடுங்கள் எனஉத்தரவிட்டுப்போய்விட்டார்.
மன்னன் போனதும் அருகில் இருந்தவர்கள்அபிராமிபட்டரிடம் நிகழ்ந்த சம்பவத்தை உணரவைத்தனர்.அவருக்கு உயிர்பயம்வந்துவிட்டது.
அபிராமி பட்டர் அபிராமி அம்மனைச் சரணைடந்து அவளை நினைத்து கண்ணீர்பெருகப் பாடினார். இரவு வந்தது. பௌர்ணமி வந்தது. மன்னன் அலறியடித்து ஓடி வந்துஅபிராமிபட்டரிடம் மன்னிப்புக் கேட்டான்.அபிராமி பட்டர் ஆனந்தக்கண்ணீர் சிந்தினார்.அபிராமி அம்மனுக்கு நன்றி கூறினார்.இன்றைய நவீன வானியல் ஆய்வுகள் கூறுவதுஎன்னவென்றால்,25,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக மூன்று பவுர்ணமிகள்வரும்.அதாவது, பவுர்ணமி-அமாவாசை-பவுர்ணமி என்ற சுழற்சி ஒருமுறை மட்டும்உடையும்.

இதன் மூலம் இனி ஒரு விஷயமும் தெளிவடைகிறது நமது தமிழ் பண்பாட்டின் தொன்மை இது ஒரு பெரியவர் வாய்வழியாக சொன்ன விஷயம் உண்மை எந்த அளவு இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் தெளிவு படுத்தட்டும்

No comments:

Post a Comment