Tuesday, November 12, 2019

நண்பர்களுக்கு அடிக்கடி குரு பற்றிய சந்தேகம் தீர்க்கும் பதிவு

நண்பர்களுக்கு அடிக்கடி குரு பற்றிய சந்தேகம் தீர்க்கும் பதிவு.  அவசியம் ஒரு முறையாவது படிக்க வேண்டுகிறேன்.

குரு தரிசனம்

கேள்வி பதில்
--------------------

1. குரு எல்லாம் குருவா ?

எல்லா குருவும் குரு அல்ல.
குரு முன் உன் மனம் நின்றாலே அவர் குருவாவர்.
குருவிடம் உன் மனம் பேச வேண்டும்.
குருவிடம் பணம் பேசக் கூடாது.

2. குருவை தேடுபவர் யார்?

குருவைத் தேடுபவர் இறைவனைத் தேடுகிறான்.

3. குருவின் தகுதியை சோதிப்பவன் யார்?

குருவின் தகுதியை சோதிப்பவன் துடுப்பு இல்லா படகோட்டி.

4. குருவைக் கண்டால் என்னவாக  உருவாகிறான்?

குருவைக் கண்டவன் உருப்பெறத் தொடங்குகிறான்.
குருவை ஏற்பவன் குருவின் சீடனாகிறான்.

5. குரு முழுமையானவராக சாட்சி என்ன?

குருவை முழுமையானவராக அறிய, அவர் மெய் ஞானமே சாட்சி.

6. குரு என்பவர் யாருக்காக?

குரு என்பவர் மக்களுக்காக வந்த இறைதூதர்.

7. குருவிடம் என்ன கிடைக்கும்?

குருவால் திருவருள் கிட்டும்.

8. குரு என்பவர் யார்?

குரு என்பவர் மெய் ஞானத் திறவுகோல்.

9. குருகடாட்சம் யாரிடம் சேர்க்கும்?

இறைவனிடம் சேர்க்கும்.

10. நல்ல குருவை அறிவது எப்படி?

சுயநலம், ஆடம்பரம், பாரபட்சம் அற்ற எளிமை,இனிமை, தெய்வீகம்
அமைதி, சாந்தம் நற்பண்பின் வடிவுமானவர்.

11. குருவாக ஆவதற்கு வயது உண்டா?

தெய்வீக தெளிவு இருந்தால் போதும்.

12. குரு தன்மை என்ன?

இறைத்தன்மை நிறைந்தவர்.

13. குருவால் தெய்வீகத்தை காட்ட முடியுமா?

முடியும் நீ தகுதி உடையவனாய் இருந்தால்.

14. உண்மை குருவை பரிசோதித்துக் கொண்டே இருக்கலாமா?

பரிசோதித்துக் கொண்டே இருக்கலாம். நீ முன்னேறாமல் இருப்பாய்.

15. குருவை நம்ப என் மனம் மறுக்கிறது ஏன்?

முதலில் உன்னை நம்பு பிறகு குருவை நம்பு.

16. குரு சேவை எதற்கு?

குரு சேவை குருவுக்கு அல்ல. அவருக்குள் இருக்கும் அருளுக்கும்
மெய்ஞானத்திற்கும் உன் சேவை சமர்ப்பணம் ஆகிறது. குரு சேவையே இறை சேவை.

17. குருவுக்கு மற்றோர் பெயர் கூறுங்கள்?

குரு என்பவர் பாவ விமோட்சகர்.

18. குருவை நாம் தேடிச் செல்ல வேண்டுமா?

இறைதேடல், இறைதாகம், இறைப்பசி இருந்தால் நீ தேடுவாய்.

19. குரு என்பவர் கடவுளா?

உன்னுள் கடவுள் ஒழிந்து இருக்கிறார்
குருவினுள் கடவுள் நிறைந்து இருக்கிறார்.

20. குரு என்பவர் எதற்கு?

குரு என்பவர் கடவுளுக்கும் நமக்கும் உள்ள தெய்வீகத் தொடர்பை ஏற்படுத்துவதற்கு.
மாயை நிலையை விலக்கி மன இருளை அகற்றுவார்.

21. குரு கடவுளை அறியச் செய்வாரா?

குரு கடவுளை உன்னுள் தெரியச் செய்வார்.

22. குருவின் மகத்துவம் என்ன?

தான் அறிந்ததை பிறர் அறியச் செய்வது

23. குருவை சோதிக்கலாமா?

அது நெருப்பாக இருந்தால் உன்னைச் சுடும்.

24. குருவை எவ்வாறு அறிவாய்?

மெய்யை மெய் அறியும்.

25. குரு கடாட்சம் பெற என்ன வேண்டும்?

குரு கடாட்சம் பெற நற்பண்பு தெய்வபக்தியும் வேண்டும்.

26. குரு பக்தி எப்படிப்பட்டது?

குரு பக்தி குழந்தை தாய்மீது வைக்கும் அன்பு போன்றது.

27. தெய்வீக குருவை எவ்வாறு அறிவாய்?

அவரைக் காண மனம் துடிக்கும். அவர் முன் அமர மனம் ஏங்கும்.
அவர் முன் மனம் அடங்கும். அவர் சொல்வதை கேட்டு ரசித்து நல்வழியில் நடக்கும்.

28. குருவிடம் பிற மதத்தவர் போகலாமா?

குரு என்பவர் மதம் சார்ந்தவர் அல்ல. எல்லாம் கடந்தால் தான் குருவாக பிரகாசிக்க
முடியும்.

29. குரு சீடனால் உலகிற்கு பயன் என்ன?

குருவால் நற்சீடனும் சீடனால் குருவும் உருவாகிறார்கள்.
இவர்களால் மட்டுமே இறைபுகழ் ஆன்மீகம் பரவுகிறது.

30. குருவை யார் தேர்வு செய்கிறார்கள்?

குருவை கடவுள் நிர்ணயம் செய்கிறார்.

31. குரு சிஷ்ய துரோகம் பாவமா?

தெய்வ நிந்தனைக்கு உரியது. பல  இழிபிறப்பைத் தரும்.

32. குருவாக முதல் தகுதி என்ன?

எப்போதும் இறை உணர்நிலையில் சமாதி நிலை அடைபவரே குருவாக முடியும்.

33. குருவே இல்லாது ஆன்மீகத்தில் ஜெயிக்க முடியுமா?

பிறப்பிலேயே ஜென்மபலன், கர்மபலன், யோகபலன், ஆன்மீகப்பலன் கூடியவனாக இருக்க வேண்டும்.

34. குருவுக்குள் அடங்கியது எது?

பிரபஞ்சமே அண்டம். அண்டமே ஆண்டவன். ஆண்டவனையே உள் அடக்கியவன் குரு.

35. குரு நேசம்?

சிவ நேசம்.

36. குருவால் முக்தி தர முடியுமா?

குருவால் பக்தியையும் முக்தியையும் காட்ட முடியும்.

37. குரு எதையாவது தேடுவாரா?

தேடுவார். நல்ல சிஷ்யனை.

38. குருவுக்கு ஞானம் எங்கிருந்து  கிடைக்கிறது?

இறைவனிடம் இருந்தே கிடைக்கிறது.

40. குருவிடம் குருட்டு நம்பிக்கை  வைக்கலாமா?

உண்மை குருவிடம் வைக்கும் நம்பிக்கை தெய்வத்தையே போய் சேரும்.

41. குருவுக்குள் கோயில் கொள்வது எது?

இறைவன்.

42. குரு பாவத்தை போக்குவாரா?

குரு பாவத்தை அறிந்து தெளியச் செய்வார்.
பாவத்தை அனுபவித்து கழிக்கச் செய்வார். பாவம் கழிக்காது ஆண்டவனிடம் போக முடியாது.

43. குருவுக்கு சிஷ்யன் ஆற்றும் கடமை யாது?

நல்ல பண்புள்ள சிஷ்யனாக இருப்பதுவே குருவுக்கே பெருமை.

44. குருவிடம் சிஷ்ய பாரபட்சம் உண்டா?

குரு ஒரு ஜீவகாந்தம் (பரகாந்தம் - குரு).

இரும்பாக இருந்தாலும் துரும்பாக இருந்தாலும் ஈர்த்து கொள்ளும்.

45. குரு வேதம் ஓத வேண்டுமா?

மானசீக பூஜையுடன் மானசீகமாக  இறைவனாகவே இருப்பார்.

46. குரு ஜாதி பார்த்து அருள் புரிவாரா?

இறைவன் சாதி பார்த்தா அருள் புரித்தான்.

47. குருவை மறந்தால்?

தெய்வம் மறக்கும்.

48. குருவிடமிருந்து விலகியவன்?

தெய்வத்திடமிருந்து விலகிடுவான்.

49. குருவை வஞ்சிப்பது?

தெய்வக் குற்றம்.

50. குருவின் வெளிப்பாடு யாது?

 மெய் ஞானம்.

No comments:

Post a Comment