Thursday, November 7, 2019

ராஜராஜன் சோழன் காலத்தில்

ராஜராஜன் சோழன் காலத்தில்... அவர் உயிருடன் இருக்கும் போதே... தஞ்சை கோயிலில் அவருக்கு நிர்மாணிக்கப்பட்ட சிலை இது...
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு... ஆண்கள் மட்டுமல்ல... பெண்களும் பூணூல் அணியும் வழக்கம் இருந்துள்ளது.

ராஜராஜ சோழன் முப்பிரிகள் கொண்ட பூணூலும்...
அவரின் மனைவி ஒரு பிரி கொண்ட பூணூலும் அணிந்திருக்கிறார்கள்.
ஆனால்... கீழே அமர்ந்திருக்கும் ராஜேந்திர சோழனிடம் பூணூல் இல்லை.
பூணூல் என்பது குறிப்பிட்ட வயதோ... பயிற்சியோ... பதவியோ... பெற்ற பின் அணியும் வழக்கம் இருந்திருக்க வேண்டும். அல்லது முக்கிய நிகழ்வுகளின் போது மட்டும் பூணூல் அணியும் வழக்கம் இருந்திருக்க வேண்டும்.

மேலும் பெண்கள் காது வளர்த்து... காதை நீளமாக்கி... அணிகலன் அணியும் வழக்கமும் இருந்திருக்கிறது. காதணி அணியும் வழக்கம் இந்து மதத்தில் மட்டும் உள்ள வழக்கம். ராஜராஜ சோழன் காதிலும் காதணிகள் உள்ளன.
கைக்காப்புகள், மோதிரங்கள் அணியும் வழக்கமும் இருந்திருக்கிறது.
ராஜராஜ சோழனின் மணிமகுடத்தில்... புலி முக உருவமோ... யாளி முக உருவமோ பொறிக்கப்பட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது.
அணிகலனின் நுணுக்க வேலைப்பாடுகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செல்வச்செழிப்பு வீரம் கலை நாகரீகம் ஆன்மீகம் அறம் என சொழித்தோங்கிய நிலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே பெருமையாக உள்ளது.

#ராஜராஜசோழன்_1034சதயவிழா...

No comments:

Post a Comment