Sunday, February 1, 2015

கி.மு. 5000 ஆண்டுகளுக்கு


கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிந்துவெளித் திராவிட மக்கள் கொண்டிருந்த மொழியே தென் இந்தியத் தமிழரும் கொண்டிருந்தனர். இந்தியா முழுவதிலும் ஆரியர் வருகைக்கு முன்பு தமிழ் மொழி ஒரே வகையில் வளர்ச்சி அடைந்து வந்தது. சிந்துப் பிரதேசத்தில் காணப்பெற்ற சங்கேதக் குறிகளே நாளடைவில் 'விக்ரமக்கோல்' கல்வெட்டில் கண்ட வடிவம் பெற்றன. அவையே பின்னர் பிராமி எழுத்துக்களாக மாறின. பிராமி எழுத்திலிருந்து வேறு மாறுதல்களுடன் வடமொழிக் குறிகள் ஏற்படுத்தப்பட்டன. அவற்றிலிருந்து கிரந்தம், கிரந்தத் தமிழ் வளர்ச்சியடைந்தன என அறியலாம்.

சிந்து வெளியில் காணப்படும் சித்திர சங்கேத எழுத்துக்கள் தமிழ்நாட்டுப் பழைய நாணயங்களில் காணப்படுகின்றன.
தமிழ் நூல்கள் மட்டுமே எழுத்துக்களின் தோற்றங்களைப் பலவகையாக விளக்குகின்றன.
சித்திர சங்கேத எழுத்துக்களின்று தமிழகத்தில் எழுத்துக்கள் தனி முறையில் தோற்றமாகி வளர்ச்சி பெற்று, வட்டெழுத்துஎன்ற நிலையை அடைந்திருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment