”செய்யும் தொழிலே தெய்வம்”
ஒரு ஊருல ஒரு வயதான வீடு கட்டும் மேஷ்திரி இருந்தார்.அவர் பல காலமாக ஒரு காண்ட்ராக்டரிடம் வேலை செய்துகிட்டு இருந்தார்.ஒரு நாள் காண்ட்ராக்டர் கிட்ட போய் எனக்கு வயசாயிடுச்சு அதுனால இப்ப கட்டுறது தான் கடைசி வீடு ,என்னால இனிமே வேலைக்கு வர முடியாதுன்னு சொன்னார்.
ஏம்பா நீ பல வருஷமா என் கிட்ட வேலை செய்யிர அதுனால இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் எனக்காக கட்டி கொடுப்பா என்று காண்ட்ராக்டர் கேட்டார்.மேஷ்திரியும் வேண்டா வெறுப்பா ஒத்துக்கிட்டு வீடு கட்ட ஆரம்பித்தார்.
கொஞ்சம் கூட ஆர்வம் இல்லாமல் ஏனோதானோ என்று ஒரு வீட்டை கட்டி முடித்து சாவியை கொண்டு போய் காண்ட்ராக்டரிடம் கொடுத்தார்.
காண்ட்ராக்டர் சாவியை வாங்கி கொண்டு இத்தனை ஆண்டுகளாக எனக்காக உழைத்த உனக்கு இந்த வீட்டை பரிசாக தருகிறேன் என்று சொல்லிவிட்டு சாவியை அவரிடமே திருப்பி கொடுத்தார்.
அடடா நமக்காக தான் இந்த வீடுன்னு தெரிஞ்சி இருந்தா அழகாக கட்டி இருக்கலாமே என்று மேஷ்திரி வருத்தப்பட்டார்.
_____________________________________________________
நீதி: ‘செய்யும் தொழிலே தெய்வம்’.எந்த ஒரு வேலை செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்.ஏனோதானோ என்று செய்தால் இப்படி தான் நடக்கும்.
No comments:
Post a Comment