Sunday, February 8, 2015

எளிய முதல்வர்



எளிய முதல்வர்
--------------------
மூன்றாவது முறையாக முதல்வர் பொறுப்பு வகிக்கும் அவரது சொத்து மதிப்பு ரூ. 13,900.

அவருக்கு கிடைக்கும் மாதச்சம்பளம் ரூ. 9,200.
அலவன்ஸ் ரூ. 1,200.

அவற்றை கட்சிக்கே கொடுத்துவிடுகிறார்,

இவரது மனைவி மத்திய சமூக நலத்துறையில் வேலை செய்தவர், அவருக்கு வரும் ஓய்வூதியத்தில் தான் குடும்பம் நடக்கிறது. 

முதல்வரின் மனைவி வெளியே செல்லும்போது அரசு காரை உபயோகிப்பதில்லை.

ரிக்ஷாவில் எந்த பாதுகாவலரும் இன்றித்தான் 
செல்கிறார். 

இத்தனை எளிமையான முதல் மந்திரி யாரென்று யோசிக்கிறீர்களா?

திரிபுராவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி முதல்வரான மாணிக் சர்க்கார் தான் அவர்.

இப்படிப்பட்டவர்களால்தான் நாட்டில் இன்னும் மழை பெய்கிறது.

நல்லோர் ஒருவர் இருக்கும் பொருட்டே 
பெய்யுமாம் மா மழை.

நலமுடன் வாழ்க எம்மான். . .

No comments:

Post a Comment