Thursday, February 12, 2015

தட்டைப்பயறு, பலருக்கு


தட்டைப்பயறு, பலருக்கு மிகவும் பிடித்தமான உணவுப் பொருள். இதற்கு காரணம் அதன் சுவை தான். அதிலும் இதனை குழம்பு வைத்து சாப்பிட்டால், அதன் ருசிக்கு இணை எதுவும் வர முடியாது. அதேப் போல் தட்டைப்பயறை சேனைக்கிழங்குடன் சேர்த்து மசாலா செய்து சாப்பிட்டாலும் அட்டகாசமாக இருக்கும்.

இங்கு தட்டைப்பயறை சேனைக்கிழங்குடன் சேர்த்து எப்படி மசாலா செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து சற்று செய்து தான் பாருங்களேன்...

தேவையான பொருட்கள்:

தட்டைப்பயறு - 1 கப்
சேனைக்கிழங்கு - 2 கப் (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு

அரைப்பதற்கு...

தேங்காய் - 1 கப்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
பூண்டு - 3 பற்கள்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

தாளிப்பதற்கு...

தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

முதலில் தட்டைப்பயறை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் தட்டைப்பயறை கழுவி சேர்த்து, அதில் சிறிது தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 3 விசில் விட்டு, தீயை குறைத்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் குக்கரை இறக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் சேனைக்கிழங்கை சேர்த்து, தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து மூடி வைத்து 15-20 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின்பு அதில் தட்டைப்பயறை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

பின் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அந்த பேஸ்ட்டை அடுப்பில் உள்ள தட்டைப்பயறு கலவையுடன் சேர்த்து நன்கு கிளறி, 10 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க விட வேண்டும்.

அதற்குள் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, மசாலாவுடன் சேர்த்து பிரட்டி இறக்கினால், தட்டைப்பயறு மசாலா ரெடி!!!

No comments:

Post a Comment