Monday, January 19, 2015

தமிழன்



யுத்தங்கள் ஓய்ந்து நிம்மதியான வாழ்வை நோக்கி காத்திருக்கும் தமிழ் மக்களின் மனங்களில் எப்போதும் ஓயாமல் ஓலித்துக் கொண்டிருக்கும் கேள்வி;இலங்கையிலே நிம்மதியான வாழ்வு எங்களுக்கு கிடைக்காதா என்பது தான். தமிழ் மக்களுக்கு தனித் தமிழ் ஈழத்தைத் தராவிடினும் நிம்மதியான வாழ்வு வாழ அவர்களுக்கு சரியான தீர்வினை வழங்குவதற்கு இன்றைய சிங்கள அரசு பின்னடித்து வரும் நிலையில்; சில சிங்களப் பேரினவாதிகள்(உதாரணம்:ஹெகல உறுமய போன்றன ) இலங்கையின் ஆதிக் குடிகள் சிங்களவர் தான், தமிழர்கள் வந்தேறு குடிகள் அவர்கள் சிங்களவர்களாலே ஆளப்பட வேண்டும் என்று புலம்புவதனை ஏற்க்க முடியாது.

இந்த நிலையில் சிங்களப் பேரினவாதிகள் சொல்வது போல் தமிழர்கள் வந்தேறு குடிகளா என்று ஆராய்ந்து அதை மறுத்துக் கூற வேண்டியது சரித்ரவியல் ஆய்வாளர்களின் கடமையாகும். குறிப்பாக தமிழ் ஆய்வாளர்களின் தலையாய கடமையாகும்.

சிங்களப் பேரினவாதிகள் சொல்வது போல் தமிழர்கள் வந்தேறு குடிகள? எனப் பிற சிங்கள மக்களால் சிந்திப்பதற்குப் பிரதான காரணம் தமிழர்கள் குடித்தொகையில் குறைவாக இருப்பதேயாகும். ஆனால் வரலாறு என்பது வெறும் தலைகளை மட்டும் எண்ணிக் கணக்கிடுவதில்லையே! இன்றைய உலக வல்லரசு ஆதிக்குடிகள் வீரம் செறிந்த செவிந்தியர்கள் அவர்கள் எல்லையோரங்களுக்குத் துரத்தப்பட்டு விட்டார்கள்.கங்காரு தேசம் அவுஸ்திரேலியாவின் உண்மைச் சுதேசிகள் கருப்பர்கள் தான்,ஆனால் இன்று அவர்களுக்கு அங்கு முகவரியே இல்லை. ஏனென்றால் அவை ஆட்சியாளர்களினால் திட்டமிட்டு மறைக்கப் பட்டு விட்டன.ஆட்சியாயர்கள் தங்கள் சர்வ வல்லமை அதிகாரங்களை பிரயோகித்து தங்களையே ஆதிக் குடிகள் என்று புதுக் கதி புனையும் வழக்கத்திற்கு மேலே சொன்ன இரு நாடுகளுமே சரியான உதாரணம் ஆகும்.

அமெரிக்கனும்,ரசியனும் விண்வெளி ஏகபோகத்திற்காய் போட்டியிட்டுக் காத்திருந்த இடையிலே வில்லத்தனமாய் இந்தியாவும், சீனாவும் புகுந்து போட்டியில் பங்கெடுக்கும் இக்காலகட்டத்தில்; இலங்கைத் தமிழர் வந்தேறு குடிகளாவேன்று காரசாரமான கருத்து மோதல் நடைபெறுவது ஆச்சரியமான விடயம் தான்.
1917 இல் டாக்டர் போல் பீரிஸ் சொன்ன கருத்துக்களப் புதைகுழியில் மூடிப் புதைத்துவிட்டு ,1984 இல் யாழ்ப்பான பல்கலைக்கழக முன்னால் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் கார்த்திகேசு இந்திரபாலா கூறிய "கி.பி 13 ஆம் நூற்றாண்டில் தமிழர்கள் இலங்கையில் குடியேறினார்கள்" என்ற ஒரு தவறான கருத்தை சிங்களப் பேரினவாத வரலாற்று ஆய்வாளர்கள் தூக்கிப் பிடிப்பது என்? அவர்கள் டாக்டர் போல் பீரிஸின்கருத்தைக் கவனத்தில் கூட எடுக்க விரும்பாதது என்? ஏனென்றால் உண்மைகள் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும் என்ற மாபெரும் அச்சத்தால் தான்.
டாக்டர் போல் பீரிஸ் அப்படி என்னதான் கூறினார் என்று பார்ப்போம். சிங்களத்தின் தோற்றுவாயாகக் கருதப்படும் வியாசன் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே; இலங்கையில் கருத்தில் கொள்ளத் தக்கனவும் , முழு இந்தியாவினதும் வழிபாட்டுக்கு உரியனவுமான ஐந்து சிவாலயங்கள் இருந்திருக்கின்றன.அவை........
01 . மகாதித்தவிற்கு அண்மையிலுள்ள திருக்கேதீச்சரம்
02 .சிலாபத்தில் பிரசித்தி பெற்ற முன்னிச்சரம்
03 .மாந்ததோட்டைக்கு அருகில் தண்டேச்சரம்
04 .பெரிய கொட்டியாரக் குடாவிற்கு எதிரேயுள்ள திருக்கோணேச்சரம்
05 .காங்கேயன் துறைக்கு (காங்கேசன் துறைக்கான உண்மைப் பெயர் ) அண்மையிலுள்ள நகுலேச்சரம்
என்பவையாகும் . (ஆதாரம்:P.E Pieris, Nagadipa and Buddhist Remains in jaffna,Jrasb xxvi, NO 70 (1917) P;17-18 )
வியஜன் இலங்கையிழ்க் கால்வைக்க முன்னரே இலங்கையில் ஐந்து சிவாலயங்களைக் கட்டித் தமிழன் வலிபட்டிருக்கும் போது; முட்க்காலத்தில் தமிழல்களே இருந்திருக்கவில்லை என்று சிங்களப் பேரினவாதிகள் சொல்வது எப்படி நியாயம் ஆகும்?...இதற்குச் சிங்களப் பேரினவாதிகள் ஆதாரமாய்க் கையிலெடுப்பது இலங்கையின் வரலாற்றைக் கூறும் நூல்களில் ஒன்றெனக் கருதப்படும் சிங்களவர்களால் மட்டுமே (கவனிக்க) உருவாக்கப்பட்ட தீபவம்சத்த்திழ்க் கூறப்பட்டிருப்பதைத்தான்.

தீபவம்சம் "ஆதியில் இலங்கையில் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கவல்ல பிசாசுகளும்,பேய்களும்,பூதங்களும் வாழ்ந்து வந்தன" எனப் பூச்சாண்டிக் கதை கூறுகிறது. பேய்களும் பூதங்களும் எந்த நாட்டிலும் வாழ்ந்தது என்றால்; எந்தவொரு வரலாற்று ஆய்வாளர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இவை மநிடவியலுக்குப் புறம்பான கடடுக்கதைகளாகும்.இவை தமிழரின் மூலக் குடியான திராவிடர்கள் ஆதி இலங்கையில் வாழ்ந்ததை மறைப்பதற்காகச் சொல்லப்பட்டவையாகும்.

புத்தி விருத்தியுடையப் மனிதன் என்று முதலில் அறியப்பட்ட HOMOSAPIAN என்னும் மனிதவகை எலும்புக்கூடு பலாங்கொடையில் அகழ்வாராச்சியின் போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.HOMOSAPIAN மனிதனின் காலம் இற்றைக்கு 30000 ஆண்டுகளுக்கும் 15OOO ஆண்டுகளுக்கும் இடைப்பட்டதாகும்.

No comments:

Post a Comment