தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு -1 கப் இறைச்சி எலும்பு -1/4 கிலோ இஞ்சி
பூண்டு விழுது -2 டீஸ்பூன்
வாழைக்காய் -1 காரெட் -1 தக்காளி- 100 கிராம்
வெங்காயம் -2 கத்திரிக்காய் - 2
முருங்கைகாய்- 2 மாங்காய் -1 கருவேப்பிலை சிறிது மல்லித் தலை புதினா தலை கொஞ்சம்
மசாலாதூள்-3 ஸ்பூன் புளி நெல்லிக்காய் அளவு பட்டை -சிறிது லவங்கம் -2 ஏலக்காய்-2
மஞ்சள் தூள் தேவையான அளவு எண்ணை தேவையான அளவு
செய்முறை முதலில் இறைச்சியை இஞ்சி பூண்டு பாதி அளவு மசாலா தூள் மஞ்சள் தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து வேக வைத்து கொள்ள வேண்டும் . ஒரு பாத்திரத்தில் பருப்பு வாழைக்காய் ஆகியவற்றை வேக வைத்து பிறகு மற்ற காய்களையும் சேர்த்து வேகவைக்க வேண்டும். அதன் பிறகு வெந்த இறைச்சியை அதனுடன் சேர்க்க வேண்டும் எல்லா காய்கறிகளும் வெந்ததும் அத்துடன் புளி கரைசலை சேர்த்து கொதிக்க விடவும் . ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை லவங்கம் ஏலக்காய் கருவேப்பிலை போட்டு பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு தக்காளி சேர்த்து வதக்கி அத்துடன் மீதி இருக்கும் இஞ்சிபூண்டு கலவையை சேர்த்து நன்றாக வதக்கிய பின் காய்கறிகளுடன் சேர்த்து வேக வைத்த பருப்பு, இறைச்சி ஆகியவற்றை சேர்த்து கொஞ்ச நேரம் கொதிக்க விடவும் .கடைசியில் மல்லித்தலை புதினாத்தலை சேர்த்து இறக்கவும்.
சுவையான மட்டன் தாளிச்சா ரெடி.
No comments:
Post a Comment