Friday, January 2, 2015

ஜவ்வரிசி பாயாசம் - Sabudana Paayasam

அல்சர் மற்றும் வாய் புண் வயிற்று புண் உள்ளவர்கள்.

ஆயத்த நேரம் : 10 நிமிடம் சமைக்கு நேரம் : 20 நிமிடம் பரிமாறு அளவு – 4 நபர்களுக்கு

தேவையான பொருட்கள் ஜவ்வரிசி – 50 கிராம் பால் – அரை லிட்டர் ஏலக்காய் – 2 முந்திரி , கிஸ்மிஸ் பழம் – தலா 8 நெய் – 1 மேசைகரண்டி பாதம் – 6 எண்ணிக்கை ( ஒன்றும் பாதியுமாய் அரைத்தது) சர்க்கரை – 50 கிராம் கன்டெஸ்ட் மில்க் – 3 தேக்கரண்டி

செய்முறை

ஜவ்வரிசியை களைந்து 10 நிமிடம் ஊறவைக்கவும். முந்திரி மற்றும் கிஸ்மிஸ்பழத்தை நெய்யில் கருகாமல் வறுத்து வைக்கவும். ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்கவிட்டு ஊற வைத்த ஜவ்வரிசியை சேர்த்து வேகவைக்கவும். வெந்ததும் பால் மற்றும் ஏலக்காயை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

ஒன்றும் பாதியுமாய் அரைத்த பாதத்தை சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவைத்து வறுத்து வைத்த முந்திரி ரெய்சின்ஸை சேர்த்து கலக்கி இரக்கவும். சுவையான ஆரோக்கியமான ஜவ்வரிசி பாயாசம் ரெடி. தோசை, இடியாப்பம் போன்ற டிபன் வகைகளுக்கு அருமையான பக்க உணவாகும்.

கவனிக்க ஜவ்வரிசியின் பயன்கள். ஜவ்வரிசி வயிறு சம்பந்த பட்ட அனைத்து உபாதைகளுக்கும் நல்லது. ஜவ்வரிசி வயிற்றில் உள்ள புண்களை குணப்படுத்தும். கர்பிணி பெண்களுக்கு மிகவும் நல்லது, குழந்தைகளுக்கு சத்துமாவு தாயாரிக்கும் போது ஜவ்வரிசியையும் சேர்த்து அரைத்தால் கஞ்சி காய்ச்சும் போது மிக அருமையாக வரும். அல்சர் மற்றும் வாய் புண் வயிற்று புண் உள்ளவர்கள், இதை ஏதாவது உணவுகளில் அதாவது (ராகி கஞ்சி, நோன்பு கஞ்சி, வடை, உப்புமா, கடல் பாசி இது போல் ஏதாவது ஒன்றில் ஜவ்வரிசியை சேர்த்து சமைத்து சாப்பிடலாம்) எனக்கு என் கிரான்மாவை ரொம்ப பிடிக்கும் ,

படிக்கும் போது 2 வருடம் அவர்களுடன் தங்கி இருந்தபோது நிறைய மருத்துவ குறிப்புகள் எனக்கு சொல்லி கொடுத்து இருக்கிறார்கள் அதில் ஒன்று தான் இந்த ஜவ்வரிசியினை பற்றியதும். நான் இதை நோன்பு காலங்களில் , நோன்பு கஞ்சிக்கு அரிசியுடன் சேர்த்து சமைப்பேன் அகர் அகர் கடல் பாசிக்கு (ஜவ்வர்சி கடல்பாசி) இதை நான் பயன்படுத்துவேன்.

சூப் செய்யும் போது ஜவ்வரிசியையும் சேர்த்து சூப் செய்வேன். எங்க கிரான்மா எனக்கு சொன்னது.:வயிற்று கோளாறு, புண்கள், கர்பபை கட்டி, அபார்சஷன் ஆனவர்கள் இந்த ஜவ்வரிசியை அதிகம் எடுத்து கொன்டால். சுவருக்கு எப்படி சுண்ணாம்பு பூசினால் பார்க்க அழகாக இருக்கிறதோ அது போல் இந்த ஜவ்வரிசி வயிறு கட்டிகளை குணபடுத்தி குடல், கர்ப்பைகளை சிறப்பாக வைக்கும்.

மருந்து போல் இதை சமைத்து 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் புண்கள் கண்டிப்பாக குணமடையும். மருந்து போல் உட்கொள்ளும் போது முந்திரி நெய் எல்லாம் சேர்க்காமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள படி செய்து சாப்பிடலாம்.

ஒரு மேசைகரண்டி ஜவ்வரிசியை அரை டம்ளர் தண்ணீர் மற்றும் முக்கால் டம்ளர் பால் சேர்த்து வேகவைத்து வெந்ததும் தேவைக்கு சர்க்கரை கலந்து குடிக்கலாம். ஏறகனவே பேரிச்சைபழத்துடன் செய்தது இங்கு பகிர்ந்துள்ளேன்.

No comments:

Post a Comment