1. நாம் நல்லா இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடைய நான்கு பேர் நம்மை சுற்றி இருந்தால் , நாம் எத்தனை துன்பத்திலும் நல்லா இருப்போம்.
2. எவ்வளவு கடும் கோபத்திலும் பொறுமையாக இருக்கும் பக்குவம் வந்து விட்டால், நம்மால் எவர் மனமும் இரணமாகாது.
3. நமக்கு சந்தேகம் என கேள்வி கேட்கும் போது, கேட்பவரை எதிரியாக பார்த்துக் கொண்டே கேட்டால் அவர் சரியான பதிலையே சொன்னாலும் நம் தலையில் ஏறாது.
4. வேலி இல்லாக் காட்டில் பூவாக இருப்பதைவிட , வேலியிட்ட நந்தவனத்தில் பூவாக இருக்கும் சுதந்திரமே நமக்கு பாதுகாப்பானது.
5. எந்த விடயத்தையும் மதிப்பீடும் போது, நிறைகளைக் கூறி பின் குறைகளைச் சுட்டிக் காட்டினால், கேட்பவர் மனம் மகிழும்.
6. பெரிய பெரிய விடயங்களை புத்திசாலித் தனமாக பேசுவதை விட சிறிய சிறிய விடயங்களை கூட மனம் விட்டு பாராட்டுவதில் தான் உண்மையான பக்குவநிலை இருக்கிறது.
7. நாம் விரும்பும் எல்லாவற்றையும் செய்து சுயநலமாய் இருப்பதை விட, அடுத்தவருக்காய் செய்யும் செயலை விருப்பத்துடன் செய்து பொதுநலமாய் இருப்பது அர்த்தமானது.
8. நம்மை தேடி வழியன வரும் நல்லதை/உதவியை அப்படியே ஏற்பதற்கு முன் ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். ஒரு வேளை அது நமக்காக வீசப்படும் வலையாகக் கூட இருக்கலாம்.
No comments:
Post a Comment