இன்னும் சிலர்,
அது எங்களுடையது என
உரிமை கொண்டாடுவதில்
முனைப்பு காட்டுகின்றனர்! அவர்களில்
பெரும்பாலானோர்
ஆத்திகர்களாகவே உள்ளனர்;
உதாரணத்திற்கு ஹிந்து பார்ப்பனர்கள்,
வள்ளுவர் பார்ப்பனர் என்றும், அதில்
உள்ள அனைத்தும்
ஹிந்து கடவுள்களை பற்றிய
பாக்களே என்றும்,
சமணர்கள் வள்ளுவர்
சமணர் என்றும், அதில் கிருத்துவர்கள்
ஒரு படி மேலே சென்று, திருவள்ளுவர்
கிருத்துவர் என்றும் கூறுகின்றனர். தெருவில்
தங்கம் கிடந்தால் அதை சொந்தம்
கொண்டாட பரதேசிகள்
போட்டிபோடுவது வழக்கம் தானே?
இவர்கள் சொந்தம்
கொண்டாடினார்களே தவிர
திருக்குறளை எந்த இடத்திலும்
தாழ்வு படுத்தவில்லை. ஆனால்,
இஸ்லாமியர்கள் என்று ஒரு கூட்டம்
உள்ளது.
அதில், பாதிக்கும் மேல்
உள்ளவர்கள் குறிப்பாக உருது பேசும்
இஸ்லாமியர்கள் இருக்கிறார்களே!
அவர்கள் திருக்குறளில் உள்ளபடிஎல்லாம்
மனிதனால் வாழமுடியாது. நபி அவர்கள்
காட்டிய வழியில் தான் வாழ முடியும்
என்று ஒரே அடியாக
திருக்குறளை குப்பையில்
தூக்கி போடுகின்றனர்.
இதில் அவர்கள்
எல்லாம் தமிழர்கள் என்பது தான்
இங்கு சோகமான செய்தி.
சரி நாம் கட்டுரையின்
கருவிற்கு செல்லலாம்:-
இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு
முன்பு சொன்ன ஒரு இலக்கிய நூல்
இன்றைய அரசியல் வாதிகளுக்கு ஏற்ற
செய்தியை சொல்லுமா ?
இன்றைய
அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல இன்னும்
பலகோடி ஆண்டுகளுக்கு பிறகு
வரப்போகும் அரசியல், சமூகம், சுகாதாரம்,
ஊடகம், அறிவியல், கலை,குடும்பம்,காதல்,
மனிதர்களின் பயன்பாட்டில்,இன்னும்
என்ன என்னவெல்லாம் சமூகத்தில் மனித
வாழ்க்கையில் கலந்துள்ளதோ?
அத்தனை துறைகள் பற்றியும் திருக்குறள்
பேசும். அதற்குத்தானே திருக்குறள்
உலகப்பொதுமறை?
எல்லா காலகட்டத்திற்கும்
எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு மறை.
ஆனால் நாம் தப்போழுது காலம் கருதி,
திருக்குறள் இன்றைய அரசியலுடன்
எப்படிப்
பொருந்திபோகிறது என்று மட்டும்
பார்ப்போம்.
“கொலைமேற்கொண் டாரிற்
கொடிதே அலைமேற்
அல்லவை செய்தொழுகும் வெந்து.”
இதற்கான பொருள் :
குடிமக்களை வருத்தும்
தொழிலை மேற்கொண்டு
நீதியல்லாதவற்றைச்
செய்து கொண்டிருக்கும் அரசன்,
கொலை தொழிலை செய்பவனை விட
கொடியவன். இப்பொழுது இக்குரல்
இன்றைய அரசியலுடன்
எப்படி ஒத்துப்போகிறது என்று
பார்ப்போம்:-
ஈழத்தில் நடந்த
இனப்படுகொலைகளுக்கு,
மொத்தத்தமிழகமும் வேதனையில்
இருந்தது. பலர் தீக்குளிப்புகளும்
செய்தனர்!! ஆனால், தமிழகத்தின்
மன்னரான கலைஞரோ! தான்
தமிழர்களுக்கு செய்யவேண்டிய
நீதி மறந்து, மக்கள் வருந்தும்படியான
காரியங்களை செய்தார். இவர், ஈழத்தில்
பல லட்சம் கொலைகள் செய்த
இராஜபக்க்ஷேவை விட கொடியவர்
ஆவார்.
வள்ளுவரின் அரசியல்
புலமையை பார்த்தீர்களா? சரி மேலும் சில
குறள்களை பார்ப்போம்.
" வேலோடு நின்றான் இடுஎன் றதுபோலும்
கோலோடு நின்றான் இரவு."
அதாவது ஆட்சிக்குரிய
செங்கோலைத்தாங்கி நிற்கும் அரசன்,
மக்களிடம் பொருள் கேட்டால்,
காட்டுவழியில் வேல் கொண்டு நிற்கும்
கள்வன் களவு செய்வதற்கு சமமாகும்,
என்கிறான் அய்யன் வள்ளுவன்,
இந்த குரலுக்கு நாம் இன்றைய பெட்ரோல்
விலை ஏற்றத்தையும், அத்தியாவசிய
பொருள்களின் விலை ஏற்றத்தையும்
சற்று பார்ப்போம்
அதாவது அன்னியசெலாவணி என்று
சொல்லப்படுகிற, அமெரிக்க
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின்
மதிப்பு, வீழ்ச்சி அடைந்து கொண்டே
போகிறதாம், இதனால் இந்திய
பொருளாதாரத்தை சரி செய்ய இந்த
விலை ஏற்றம் என்று ஆளும் மன்னர்கள்
சொல்கின்றனர் இத்தனைக்கும்
இப்பொழுது கச்சா எண்ணையின்
விலை குறைந்திருக்கிறது.
என்பது குறிப்பிடத்தக்கது. ஆக
மொத்தத்தில் இவர்கள் மக்களிடம்
நேரடியாக பணம் கேட்கின்றனர்.
எனவே இப்படிப்பட்டவர்கள் காட்டில்
செல்லும்பொழுது கையில் கத்தியுடன்
வழிப்பறி செய்யும் திருடர்கள்
என்று அய்யன் சொல்கிறார். இன்று நாமும்
அதை தானே சொல்கிறோம்.
அடுத்த குறளை பார்ப்போம்,
“நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.”
அதாவது நாள்தோறும் நாட்டில் நிகழும்
நன்மை தீமைகளை ஆராய்ந்து,
நீதி வழங்காத அரசனின்
நாடு நாளுக்கு நாள் கெட்டு வரும்.
இந்த குறளிற்கு ஏற்ற ஒரு களம் என்றால்,
அதற்கு ராஜீவ்
கொலை சம்பவமன்றி வேறெதுவும் இருக்க
முடியாது! ஒவ்வொரு முறையும்
ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகள்,
உண்மையை ஆராயாமல்,
நன்மை தீமை அறியாமல் இருந்தாலும்
பரவாயில்லை, இவர்களுக்கு நன்றாக
தெரியும் ராஜீவ் கொலைக்கு யார்
காரணம் என்று! இருந்தும், இவர்கள்
சரியான நீதி வழங்காததால் நிரபராதிகள்
சிறைக்குள் வாடிக்கொண்டிருப்பதால்,
இந்தியா என்ற நாட்டில்
தமிழ்நாட்டு இளைஞர்கள் பலர்,
இந்தியா என்ற நாடே வேண்டாம்!!
தனி தமிழ் தேசத்தை அமைப்போம்!!
என்று தமிழ் தேச அரசியலை கையில்
எடுத்துள்ளனர். இது இந்தியா என்ற
நாட்டிற்கு கேடே அன்றி வேறெதுவுமல்ல.
சரி அடுத்து எந்த குறள் இன்ற
அரசியலுடன்
பொருந்துகிறது என்று பார்ப்போம்.
“அல்லற்பட்டு ஆற்றாது அழுதக்கண்
ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.”
விளக்கம் :
கொடுங்கோல் அரசனால் துன்பப்பட்டுத்
தாங்கமுடியாமல் அழுத குடிகளின்
கண்ணீர், அவ்வரசனின்
செல்வத்தை அழிக்கும் படையாகும்
என்கிறான் வள்ளுவன்,
இந்த குறளை ஒத்த மாதரி, தமிழக
முதல்வர் ஜெயலலிதா, மத்திய
அரசை இன்று பெட்ரோல்
விலை எற்றத்திர்க்காக விமர்சித்துள்ளார்.
அது என்னவென்றால்,
மக்களை இப்படி துன்பப்படுத்தும் மத்திய
அரசை, மக்களின் கண்ணீர்
அழித்துவிடும் என்பது போல
அறிக்கை விட்டுள்ளார். இதில்
நகைச்சுவை என்னவென்றால்,
அம்மக்களின் கண்ணீர் மத்திய
அரசை அழிப்பதற்கு முன்,
அம்மையாரையே முதலில் அழிக்கும். ஏன்
என்றால்? அம்மையார்
சிலநாட்களுக்கு முன்பு, மின்சாரம், பால்,
பேருந்து கட்டணம்,
என்று எல்லா அத்தியாவசிய
கட்டணத்தையும் உயர்த்தி, மக்களின்
கண்ணீரை குடம் குடமாக குடித்துள்ளார்.
மேலும் இந்த குறளிற்கு கலைஞரை கூட
பயன்படுத்திக்கொள்ளலாம். மக்களின்
கண்ணீரை வாங்கிய கலைஞர் கடைசியில்
ஆட்சியை பறிகொடுத்த பாவம், சரியாக
இந்த குறளிற்கு பொருந்தும்.
இப்படி வள்ளுவர் உலகத்தில் உள்ள
அனைவருக்கும், அனைத்திற்கும்,
அனைத்து காலத்திற்கும் பொருந்தும்
குறட்பாக்களை இயற்றியுள்ளார். அதில்
இந்த கட்டுரை அரசியலை மட்டும்
கூறுவதாகும்! இப்படி தமிழர்களின்
அரசியல், அறிவு, ஆயிரமாயிரம்
ஆண்டுகள் கடந்த
ஒரு தொன்மை அரசியல் அறிவு. ஆனால்
நமக்கு அரசியல் செய்ய ஒரு சொந்த
நாடு இல்லை. மாற்றானின் அரசியலில்,
அடிமைகளாய் வாழ்கிறோம். இதற்கு கூட
குறள் உண்டு, ஏன்
நமக்கு நாமே சொல்லிக்கொள்வானேன்!
விடுங்க.
No comments:
Post a Comment