நிலம் உழுது நெல் விதைத்து
அகம் மகிழ்ந்து அகிலம் வாழ ,
அறுவடைகள் செய்து தந்த உழவன் !
கால்நடை களோடு கடமை பேசி ,
வாய்கால் வெட்டி ,வரப்பு வெட்டி ,
நீர்பாய்ச்சி , இலக்கம் தவறா
ஏர் ஓட்டி , நாத்து நட்டு ,களை பறித்து ,
உரமிட்டு, மருந்தெளித்து ,
பருவம் பார்த்து கதிரறுத்து ,
கட்டு கட்டி , களம் சேர்த்து
காலமெல்லாம் கவிதையாய்
கலனி எங்கும் வளம் வந்த
உன்னதமிக்க உழவன் எங்கே ?
காணி நிலத்தையும் காசு பார்க்க
கல் ஊன்றி , நூல் பிடித்து ,மாடி கட்ட
தனை வளர்த்த தன்னலமற்ற பூமியை
தாரை வார்த்தான் உழவன் இங்கே... ஏன் ?
ஏன் என்ற கேள்விக்கு ஏற்றம் செய்யும்
ஏர் உழவன் பதில் ஒரு வேலை ஏற்ப்புடையதோ ?
ஆம்
ஏழை விவசாயி எத்தனை நாளைக்கு
எலிக்கறி தின்பான் ?
நான் உழைத்து , தான் விதைத்து
நல்ல பலனை நாடே உன்ன ,
கூன் விழுந்து , குடல் சிறுத்து ,
குப்புறத்தள்ளி என்னை
கூடி நின்று கொல்லென்று ,
சிரிக்குதே கொடும் வறுமை !
வெள்ளைத்துணி ,நல்லசோரும் ,
கடைத்தெருவில் கைவீசி
கைபேசி சகிதமாய் நடக்க
எனக்கில்லையா ஆசை ?
வீடு கட்ட விளைநிலம் ,
விலைபேசி விற்க வேண்டிய தேவை
உழவன் சேற்றிலே கால் வைப்பது
உலகம் சோற்றிலே கை வைக்கவாம்
இது யார் போட்ட ஒப்பந்தம் ?
சேற்றை கழுவும் விவசாயி !
சேர்ந்து வைக்கும் ஒப்பாரி !!
இதில் தவறு இருந்தால்
சிறு பிள்ளையென மன்னியுங்கள்
No comments:
Post a Comment